இந்திய வங்கிகள் அனைத்திற்கும் சவாலாகவும், தலைவலியாகவும் மாறியிருக்கிறது கூகுள் பே அறிவித்துள்ள புதிய வாய்ப்பு நிதி சேவை திட்டம். கூகுள் பே தளம் சில வருடங்களாகவே பொதுமக்கள் அதிகம் புழங்கி வரும் பேமெண்ட் தளமாகியுள்ளது.

மேலும் இது கிரெடிட் கார்டு, கடன் சேவைகள், ஷாப்பிங்கில் சேவை ஆஃபர் என்று பல இணை சேவைகளையும் அளித்து வருகிறது. இந்நிலையில் இப்போது வைப்பு நிதி திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது இந்த கூகுள் பே.

இந்திய வங்கிகளின் வர்த்தக ஆதாரம் என்பது நிரந்தர வாய்ப்பு (fixed deposit). அதற்கு வங்கிகள் வழங்கி வரும் வட்டி விகிதத்தை காட்டிலும் மிக அதிகமான வட்டியை கூகுள் பே இப்போது அறிவித்துள்ளது. ஏற்கனவே பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகள் மத்தியில் போட்டிகள் உருவாயிருக்கும் இந்த சூழ்நிலையில் கூகுளின் இந்த அறிவிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேசப்படுகிறது.

கூகுள் பே, ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி உடன் இணைந்து தனது சேவை தளத்தில் ஒரு வருடம் வைப்பு நிதி சேவையை அளிக்கிறது. இந்த ஒரு வருடத்திற்கு கூகுள் பே கொடுக்கும் வட்டி 6.85 சதவீதம். இந்தியாவில் இதுவரையில் முன்னணி வங்கிகளில் அதிகப்படியாக ஒரு வருடத்திற்கு கொடுப்பது 5.75 சதவீதம். இதனால் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதிகமான வட்டி வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இது 20 முதல் 40 வயதுள்ள மக்கள் மத்தியில் சஞ்சலத்தை ஏற்படுத்தி பல வைப்பு நிதிகளும் கூகுள் பே -க்கு மாறும் சூழ்நிலை அமையும். அதேசமயத்தில் பின்டெக் நிறுவனங்களுக்குப் போட்டியாக வட்டி விகிதத்தை இந்திய வங்கிகள் உயர்த்தவும் முடியாது. அப்படி உயர்த்தினால் வருமான இழப்பு அதிக அளவில் இருக்கும் என்கின்றனர். எப்படி இந்நிலையை சமாளிப்பது என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.