மும்பை பங்கு சந்தையில் உயர்ந்து வரும் Go Fashion பங்குகள்

மும்பை பங்கு சந்தையில் Go Fashion-ன் ஒவ்வொரு பங்கின் விலையும் IPO வெளியீட்டு விலையை காட்டிலும் இரு மடங்காகி உள்ளது. அதன் பங்குகள் ரூ.1,316க்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதே சமயம் தேசிய பங்குச் சந்தையில் (NSE) இந்நிறுவனத்தின் பங்குகள் ரூ.1,310க்கு பட்டியலிடப்பட்டன.

வலுவான பட்டியலுக்குப்பின் Go Fashion-ன் பங்குகள் இறங்கு முகத்தில் இருந்தாலும் காலை 11 மணியளவில் BSE மற்றும் NSE ஆகிய இரு சந்தைகளிலும் 80% பிரீமியம் அதிகாரத்தை பெற்றதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பாராத வகையில் ஓமிக்ரான் ஏற்படுத்திய தாக்கம்

இந்நிறுவனம் நல்லதொரு வரவேற்பை பெற்றதற்கு காரணம் அந்நிறுவனத்தின் நியாயமான IPO மதிப்பீடு மற்றும் உறுதியான வியாபார மாதிரி. ஒருவேளை உருமாறிய கொரோனா வைரஸின் புதிய மாதிரி ஓமிக்ரான் கண்டறியப்படாமல் இருந்திருந்தால் இதன் வெளியீடு இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Go Fashion சப்ஸ்கிரிப்ஷன்

இதன் சப்ஸ்கிரிப்ஷன் நவம்பர் 17ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 22ம் தேதி வரையும் இருந்தது. அதன் இறுதி நாளில் மட்டும் 135.46 முறை சப்ஸ்கிரைப் செய்யப்பட்டு மிக வலுவான வரவேற்பை பெற்றது என்று கூறப்படுகிறது. சப்ஸ்கிரிப்ஷன் – சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது ஏறக்குறைய 50 மடங்கு, நிறுவனமற்ற முதலீட்டாளர்கள் சப்ஸ்கிரிப்ஷன் 262 மடங்காக இருந்தது. அதேபோல் தகுதிவாய்ந்த நிறுவனத்தின் வாங்குபவர்கள் (QIB) 100 மடங்குக்கும் கூடுதலாக இருந்தது.