இந்தியாவில் e-commerce மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் மிகத்தீவிரம் காட்டி வருகின்றனர். அமேசான் உடன் போட்டி நிறுவனமாக இருப்பது ஃபிளிப்கார்ட் என்பது நாம் அறிந்ததே. இப்போது FlipKart நிறுவனம் பார்மசி துறையிலும் entry கொடுத்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் சந்தையில் பார்மசி சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை அதிகம் சூடுபிடித்துள்ளது. மக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ், டாடா, அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் பார்மசி வர்த்தகத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில் ஃபிளிப்கார்ட் நிறுவனமும் இப்போது இக்களத்தில் குதித்துள்ளது. இதற்காக ஃபிளிப்கார்ட் நிறுவனம் புதிய நிறுவனம் துவங்காமல் தற்போது e-commerce / டிஜிட்டல் பார்மசி வர்த்தகத்தில் ஆளுமையுடன் இருக்கும் சாஸ்தாசுந்தர் மார்க்கெட் பிளஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை தனதாக்கி புதிதாக ஹெல்த்கேர் வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது.

சாஸ்தாசுந்தர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான BL மிட்டல் அவர்கள் கூறுகையில், SastaSundar.com – மக்கள் மலிவு விலையில் தரமான மருந்து பொருட்களை ஆன்லைனில் எளிதில் பெறச்செய்வதற்கு வேண்டி பல புதுமையான வழிகளை ஏற்படுத்த தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் தரமான மருந்துகள், நோய் கண்டறிதல் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நம்பிக்கைக்குரிய நெட்வொர்க்கை உருவாக்க ஆவன செய்யவிருப்பதாகவும் கூறினார். ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் கைகோர்த்திருப்பதன் மூலம் இந்நிறுவனம் மேலும் வளர்ச்சியடையவும், வாடிக்கையாளர்கள் வட்டம் அதிகரிக்கவும் இது நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார்.

FlipKart ஹெல்த்+ ஆன்லைன் வர்த்தகம் மற்றும் வருவாய் குறிப்பிட்ட அளவை எட்டிய பின்பு e-diagnostics மற்றும் e-consultation சேவைகளையும் அளிக்க உள்ளதாக தெரிகிறது. ஃபிளிப்கார்ட் ஹெல்த்+ வர்த்தகம் தொடர்பான விவரங்கள் அனைத்தும் அதன் உயர் துணை தலைவரான அஜய் வீர் யாதவ் அவர்களது கவனத்திற்கே கொண்டு செல்லப்படும்.