ICICI வங்கி Flipkart கூட்டு சேர்ந்து இ-காமர்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ள தனிவிற்பனையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரை உடனடி மற்றும் முற்றிலும் டிஜிட்டல் ஓவர் டிராஃப்ட் (OD) வசதியை வழங்க உள்ளதாக ICICI வங்கி சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் பல விற்பனையாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பித்தலில் தொடங்கி கடன் விநியோகம் வரை அனைத்துமே டிஜிட்டல் முறையில் உள்ளது. எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் கஸ்டமராக இருந்தாலும் ICICI அளிக்கும் OD சலுகையை பெறலாம். ஆனால் அவர்கள் Flipkart-ன் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளராக இருப்பது அவசியம்.

விற்பனையாளர் ICICI வங்கியில் கரண்ட் அக்கௌன்ட் வைத்திருக்க வேண்டும்

ICICI வங்கியில் கரண்ட் அக்கௌன்ட் வைத்திருக்கும் ஒரு விற்பனையாளர் தங்கள் செயல்பாட்டு மூலதனத் தேவைக்கு உடனடியாக இந்த OD சலுகையை பெறலாம். வேறு வங்கி வாடிக்கையாளராக இருந்தால் அவர்கள் ICICI-ல் கரண்ட் அக்கௌன்ட் துவங்கி KYC சரிபார்ப்புக்கு பிறகு OD சலுகை பெற முடியும்.

இந்த புதிய மேம்படுத்தப்பட்ட செயல்முறை வரவேற்புடையது

ICICI வங்கியின் SME & Merchant Ecosystem, சுயதொழில் பிரிவின் தலைவர் திரு பங்கஜ் காட்கில் பேசுகையில், “பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஸ்கோர்கார்டு OD சலுகைக்கான செயல்முறைகள் மிக விரைவில் நடைபெறுவதை சாத்தியமாகியுள்ளது. மேலும் இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்முறை, இருப்புநிலைகள், வங்கி அறிக்கைகள் மற்றும் வரி வருமானங்களை மட்டுமே பயன்படுத்தும் பாரம்பரிய முறையில் மதிப்பிடப்படும் போது போதுமான கடன் அணுகலைப் பெறாத தனிப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு உதவுகிறது. இந்த புதிய முன்மொழிவு MSME வாடிக்கையாளர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சியுடன் எதிரொலிக்கிறது மற்றும் வணிக விரிவாக்கத்தின் புதிய வழிகளில் அவர்களை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

Fintech மற்றும் Payments Group, Flipkart-ன் மூத்த துணைத் தலைவர் திரு தீரஜ் அனேஜா கூறுகையில், “நாடு முழுவதும் உள்ள விற்பனையாளர்கள் மற்றும் MSME கூட்டாளர்கள் Flipkart சந்தையில் தொடர்ந்து நம்பிக்கை வைத்து வருவதால், அவர்கள் வர்த்தகம் உயரவும் சிறப்பாக நடைபெறவும் அனைத்து உதவிகளையும் நிதியுதவி உட்பட Flipkart செய்யும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அத்துடன் Flipkart அதன் விற்பனையாளர்களின் நிதி சுதந்திரத்தை நோக்கி தனது அர்ப்பணிப்பு திட்டமான Growth Capital மூலம் செயல்பட்டு வருகிறது, மேலும் சந்தை தேவைகளின் அடிப்படையில் அதை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

‘InstaOD’ நன்மைகள்

Flipkart Seller Hub மூலம், முற்றிலும் டிஜிட்டல் மற்றும் காகிதமற்ற முறையில் உடனடியாக OD-க்கு விண்ணப்பிக்கலாம். Flipkart இல் பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளராக இருத்தல் அவசியம். விற்பனையாளர்கள் அவர்களின் கிரெடிட் பீரோ ஸ்கோர் மற்றும் Flipkart-ல் அவர்களின் பரிவர்த்தனை வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் OD விண்ணப்பத்தை உடனடியாக மதிப்பீடு செய்கிறது ICICI வங்கி. எளிமை மற்றும் விரைவுபடுத்தப்பட்ட கடன் ஒப்புதல் செயல்முறைகள். அங்கீகரிக்கப்பட்ட OD தொகை உடனடியாக அனுமதிக்கப்பட்டு விற்பனையாளரின் நடப்புக் கணக்கில் செலுத்தப்படும்