ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக நமது இந்திய அரசு ஆகஸ்ட் 17-ம் தேதி  ஊக்கத்தொகை திட்டத்தை (incentive scheme) அறிமுகம் செய்துள்ளது.

“இந்த திட்டம் உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO) விதிகளுக்கு இணக்கமாக நடைமுறைப்படுத்தப்படும். நமது நாட்டின் ஏற்றுமதியை முன்னேற்றும் உன்னத நோக்குடன் இத்திட்டம் இருக்கும். மேலும் இதனால் ஏற்றுமதியாளர்கள் மாநில மற்றும் கூட்டாட்சியிடம் வரியாக செலுத்திய தொகையை திரும்ப பெறவும் வாய்ப்புள்ளது” என்று வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் 19,440 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக ஏற்றுமதியாளர்களுக்கு செலவிட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

நடப்பு நிதியாண்டு இறுதியில் மார்ச் 2022-ல் 400 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் இருக்கவேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில்  (2020-21) ஏற்றுமதி வர்த்தகத்தின் மதிப்பு 291.2 பில்லியன் டாலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(1 டாலரின் இந்தியப்பண இன்றைய மதிப்பு = 74.38)