மூன்று வருடங்களாக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. பல நிறுவனங்கள் உற்பத்தி தளங்களையே மூடிவிட்டன . இதைத் தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் அடுத்த அடியை இந்நிறுவனங்களுக்கு கொடுத்து அவற்றை பொருளாதாரத்தில் பாதாளத்திற்கே தள்ளின.

இந்த சூழலிலிருந்து மீள்வோம் என்ற நம்பிக்கையை இழந்திருந்த பல நிறுவனங்களுக்கும் 2021-ம் ஆண்டு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. கடந்த 7 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் தான் இந்தியாவில் இருந்து வாகனங்கள் அயல்நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களை காட்டிலும் 3 மடங்கு அதிகமாக இந்த நிதியாண்டில் இதுவரை ஏற்றுமதி நடந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 11 லட்சம் இரு சக்கர வாகனங்களும் 3 லட்சத்திற்கும் மேல் பிற வாகனங்களும் நமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று தெரியவருகிறது.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.7 லட்சம் கோடி. பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ் மோட்டார்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இவற்றில் முன்னணியில் உள்ளன. இந்நிறுவனங்கள் மட்டும் 78 சதவீத இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன. இந்தியாவிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதில் அமெரிக்கா முன்னிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மேற்காசிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் வருகின்றன.

வாகனங்களைத் தொடர்ந்து வாகன உதிரி பாகங்களின் ஏற்றுமதியும் இந்த ஆண்டு ஏற்றத்திலேயே உள்ளது. இந்த ஆண்டு முதல் காலாண்டில் மட்டும் ரூ.86000 கோடி மதிப்பிலான வாகன உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வாகன உதிரிபாகங்களை 100% உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. அதற்கு செமி கண்டக்டர் தயாரிப்புக்கான கட்டமைப்பு நம் நாட்டில் ஏற்படுத்த வேண்டும்.

இப்போது அதற்குரிய சூழல் இல்லாத நிலை உள்ளது. ஆனாலும் தற்போது 70% உதிரிபாகங்கள் நம் நாட்டில் தயாரிக்கப்படுகிறது. மின்னனு உதிரிபாகங்களுக்கு நாம் சீனாவையே பெருமளவில் நம்பியுள்ளோம். ஏற்றுமதியில் ஏற்றம் கண்டாலும் கூட உள்நாட்டு விற்பனை இன்னமும் திருப்திகரமாக இல்லை. உள்நாட்டு விற்பனை குறைவது ஒரு நாட்டை பொருளாதார ரீதியாக தடுமாற வைக்கும் என்று வல்லுநர்கள் சொல்வதுண்டு. விரைவில் மீளுவோம்