மோட்டார் சைக்கிள், இதர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான பிரபல எய்ஷர் மோட்டார்ஸ் ராயல் என்பீல்டு வாகனங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் தனது தீவிர முயற்சியாலும் லாபகரமான விற்பனை உத்திகளாலும் மிகக்குறிய காலத்தில் அதாவது 3 மாதங்களில் நிகரலாபமாக ரூ.237 கோடியை ஈட்டியுள்ளது என்று தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கடந்த 2020 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.55 கோடி நஷ்டத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜூன் 2021 காலாண்டில் இதன் செயல்பாடு வாயிலான வருவாய் ரூ.1974 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை எண்ணிக்கை ஜூன் 2021-ல் 1.22 லட்சமாகப் பதியப்பட்டுள்ளது.

நேற்றைய மும்பை பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்தவரையில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை 2.96 சதவீதம் உயர்ந்து ரூ.2590.50 ஆக இருந்தது. இந்த வளர்ச்சி இன்னமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.