இன்றைக்கு புழக்கத்தில் இருந்து வரும் “கரன்சி” அதாவது “பணம்” ஆரம்பகாலத்திலிருந்து பல வகையில் உருமாறிக் கொண்டே வருகின்றது. பொருளுக்குப் பொருள் மாற்றிய பண்டமாற்று முறையிலிருந்து மெல்ல மெல்ல மாறி நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன.

அதற்குப் பிறகு நோட்டுக்கள் வர ஆரம்பித்து இன்று வரை அவையே நமது அன்றாட உபயோகத்தில் இருந்து வருகின்றன. இந்த நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் யாவும் நமது கைகளால் தொட்டு புழங்கலம் என்ற வண்ணம் இருக்கின்றன.தற்போது இதற்கும் மாறாக எலக்ட்ரானிக் முறையில் மட்டுமே நமது கணக்கில் இருக்கும் பணப்புழக்கமே கிரிப்டோ கரன்சி என்பது. உருவ, வடிவமற்ற, பார்க்கவோ, தொடவோ முடியாத பணம்.

இந்த கிரிப்டோ கரன்சியின் மதிப்பு சார்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்படுகிறது. BITCOIN என்ற நாணயம்தான் முதன்முதலில் புழக்கத்திற்கு வந்த கிரிப்டோ கரன்சி. பின்னால் 6000-க்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் வந்துள்ளன. “விர்ச்சுவல் கரன்சி“எனப்படும். இந்த பிட்காயினை ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பரிவார்த்தனைக்கு பயன்படுத்தலாம். ஆனால் இந்தப் பரிவார்த்தனையில் பல எதார்த்த விபரங்கள் அவ்வளவு வெளிப்படையாக இருப்பதில்லை. குறிப்பிட்ட சில காரணங்களால் ரிசார்வ் வங்கி. இந்த விர்ச்சுவல் கரன்சிக்கு தடைவிதித்திருந்தது. ஆனால் கடந்த மார்ச் 4 ம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில் ரிசார்வ் வங்கி விதித்த தடையை நீக்குவதாகத் தெரிவித்தது.


அதன் பிறகு வெளிப்படையாகவே இதில் முதலீடு செய்வதும்,பரிவார்த்தனையும், நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படி பிரபலமான பிட்காயின் இன்று 2.93 சதவீதம் வளர்ச்சி கண்டு, அதன் மதிப்பு 47,200 டாலராக இருந்தது. இதே சில நாட்களுக்கு முன் 30,000 டாலருக்கும் கீழே குறைந்திருந்தது. இப்போது ஏற்பட்டுள்ள இந்த மதிப்பு கூடுதல் பிட்காயினில் முதலீடு செய்திருந்த அனைவருக்கும் சற்றே நிம்மதியைத் தந்துள்ளது. வரவிருக்கும் நாட்களிலும் இந்த முன்னேற்றம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளனர்.