நவம்பரில் 10% சரிவு

நவம்பர் மாதத்தில் தனது விற்பனை அளவு 10% குறைந்து 3.79 லட்சத்துக்கு நடைபெற்றதை அறிவித்தது Bajaj நிறுவனம். கடந்த ஆண்டு இதன் விற்பனை மதிப்பு 4.22 லட்சம் என்றிருந்தது.

2020-ம் ஆண்டுடன் ஒப்பீடு

சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டில் Bajaj ஆட்டோ விற்பனையின் ஒரு சிறிய ஒப்பீடு இதோ –
உள்நாட்டு விற்பனை சென்ற ஆண்டு நவம்பரில் சுமார் 1.99 லட்சம் அதுவே இந்த ஆண்டு நவம்பர் 2021-ல் 1.59 லட்சம். எனில் 20% குறைவை சந்தித்துள்ளது. ஏற்றுமதியை பொறுத்தவரையில் 2020-ல் 2.23 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்த இந்நிறுவனம் 1% சரிவை சந்தித்து இந்த ஆண்டு 2021 நவம்பரில் 2.20 லட்சம் யூனிட்களாக உள்ளது.

பஜாஜ் ஆட்டோ கமர்ஷியல் வாகன விற்பனை நிலவரம்

பஜாஜ் ஆட்டோவின் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை நவம்பர் மாதத்தில் 29% அதிகரித்தது. அதே போல் 2% ஏற்றுமதியும் உயர்ந்துள்ளததாக பதியப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இரு சக்கர வாகன விற்பனை தொடர்ந்து சுமார் 23% குறைந்து 1.45 லட்சம் யூனிட்கள் என உள்ளது. ஏற்றுமதியும் 2% குறைவாகவே உள்ளது. கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை ஒட்டு மொத்தமாக 10% அதிகரித்துள்ளது.