ஐரோப்பிய நாடு, அமேசான் நிறுவனம் மூன்றாம் தர விற்பனையாளர்களை (third party seller) தன் சொந்த FBA லாஜிஸ்டிக்ஸ் சேவையை உபயோகிக்க அழுத்தம் கொடுத்துள்ளது என்ற கருத்தை முன் வைக்கிறது. ஆனால் அதற்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராதம் மற்றும் தீர்வுகள் நியாயமற்றவை என்று Amazon நிறுவனம் பதிலளித்துள்ளது.

200 மில்லியன் யூரோ அபராதம் பெற்ற Amazon மற்றும் ஆப்பிள் Inc

சில நாட்களுக்கு முன் இத்தாலியின் நம்பிக்கைக்கு எதிரான ஆணையம் அமெரிக்க ஜாம்பவான் நிறுவனங்களான அமேசான் மற்றும் ஆப்பிள் Inc-க்கு 200 மில்லியன் யூரோவுக்கும் மேல் அபராதம் விதித்தது. காரணம் ஆப்பிள் மற்றும் பீட்ஸ் பொருட்கள் anti-competitive எனப்படும் போட்டிக்கு எதிரான விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

third party seller-கள் பயன்படுத்த முடியாத விநியோக சேவைகள்

பிரைம் மெம்பர்ஷிப், FBA-ஐப் பயன்படுத்த, பிரமோஷன்ஸ் மற்றும் அதன் இணையதளத்தில் தோன்றுதல் போன்ற பல பிரத்தியேக நன்மைகளை பெறுவதை அமேசான் ஒவ்வொன்றுக்கும் இணைப்பை ஏற்படுத்தியது. பயனர்கள் பட்டியல்கள் மூலம் உட்செல்ல பிரைமின் நீலநிற லோகோ உதவுகிறது, அதேசமயம் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை பிரமோஷன்சுடன் இணைத்திருந்தால் மூன்றாம் தரப்பு விநியோக சேவைகளைப் பயன்படுத்த அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமேசான்

இவ்வாறு கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமேசான் நிறுவனம் “பங்குதாரர்கள் அவ்வாறு செய்ய வேண்டியது அவசியம் இல்லை என்றும், பெரும்பாலான விற்பனையாளர்கள் பிரைமுடன் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனரா இல்லையா என்பதை தெளிவு படுத்திக்கொள்ளாமல் FBA ஐப் பயன்படுத்துவதில்லை. இந்த சேவையின் சிறப்பாற்றல், வசதி மற்றும் போட்டித்தன்மை ஆகியவை பற்றி நன்கு அறிந்த பின்னரே அவர்கள் விரும்பியபடி இந்த சேவையை தேர்ந்தெடுக்கின்றனர்.” என்று கூறியது.

எது எப்படியாயினும் தனது பிரபலம் மற்றும் சந்தையின் முன்னணி நிலையில் இருப்பதால் அதனை தவறாக பயன்படுத்தி குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பொருட்களின் விற்பனையை மட்டும் அமேசான் நிறுவனம் ஊக்குவிப்பதாகவும் அதனால் வேறு பல நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் பல குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே இந்த குற்றங்களை விசாரித்த ஆணையம் அமேசான் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.9600 கோடி அபராதம் விதித்துள்ளது என்று தகவல் தெரியவந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டப்படி அமேசான் நிறுவனம் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.