2028-ம் ஆண்டில் ஆறு எலக்ட்ரிக் வாகனங்களை பிரத்தியேக அமைப்புடனும், தொழில்நுட்பங்களுடனும் சேர்த்து அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதற்காக Hyundai நிறுவனம் சுமார் ரூ.4000 கோடிகள் முதலீடு செய்யவிருப்பதாகவும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் & CEO SS கிம் கூறியுள்ளார். இந்நிறுவனம் இப்போது ரூ.23.7 லட்சம் விலையுள்ள Kona எலக்ட்ரிக் வாகனங்களை assemble செய்து வருகிறது. விரைவில் சென்னையிலிருக்கும் தமது தொழிற்சாலையிலேயே புதிய மாடல் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க உத்தேசித்துள்ளது என்றும் அவை அனைத்தும் பெரிய சந்தைகளை கவரும் வண்ணம் competitive விலை கொண்டவைகளாக இருக்கும் என்றும் கிம் கூறுகின்றனர்.

கார்கள் சந்தையில் வரவேற்பு பெற்று வரும் எலக்ட்ரிக் வாகனங்கள்

வரும் காலத்தில் மக்கள் அதிகம் உபயோகிக்க இருப்பவை எலெக்ட்ரிக் வண்டிகள் தான் என்று தன் கணிப்பில் தீவிரமாக உள்ளது Hyundai நிறுவனம். அரசு கொடுத்து வரும் சலுகைகள், மாநிலத்தின் பல பாகங்களிலும் அதிகரித்து வரும் சார்ஜிங் மையங்கள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சுத்தமான வாகனங்கள், நாளுக்கு நாள் உச்சத்துக்கே செல்லும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் போன்ற பல காரணங்களால் இனிமேல் பெட்ரோல், டீசல் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வண்டிகளையே மக்கள் அதிகம் வாங்குவார்கள் என்று கருத்து கூறுகிறது Hyundai.

பெரிய சந்தை மற்றும் பிரீமியம் பிரிவுகளுட்பட பல்வேறு பிரிவுகளுக்கும் தேவைப்படுகின்ற விதத்தில் ஆறு எலக்ட்ரிக் வண்டிகளை அறிமுகப்படுத்தும் நோக்கை வைத்துள்ளது Hyundai. இவை அனைத்தும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்டதாகவும், SUV தோற்றத்திலும் இருக்கக்கூடியவை, வாடிக்கையாளர்கள் முழுவதும் திருப்தி அடையும் வகையில் எண்ணிலடங்கா மாடல்கள் இருக்கும் என்று கிம் கூறுகிறார்.

இந்தியா முழுவதும் சுமார் 6000 எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் கார்கள் 2020-ம் ஆண்டில் விற்கப்படுகிறது, அதுவே 2028ம் ஆண்டில் ஏறக்குறைய 1.75 லட்சம் ––வரை விற்பனை செய்ய பிரகாசமான வாய்ப்புள்ளது என்று இந்நிறுவனம் கணித்துள்ளது.இந்தியாவில் உள்ள முக்கிய கார்கள் தயாரிப்பு நிறுவனங்களான Hyundai மற்றும் மாருதி ஆகியவை மெதுவாக பசுமை இயக்கத்தை நோக்கி நகரத்தொடங்கியிருக்கின்றன.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு அளிக்கும் ஊக்கம்

இது தவிர அரசாங்கமும் இப்போது எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. PLI போன்றவற்றின் அறிமுகங்களால் நிறுவனங்களும் புதிய முதலீடு மற்றும் நவீன மாடல்களை எலக்ட்ரிக் வாகனங்களில் புகுத்துகின்றனர். மேலும் இந்நிறுவனம் பேட்டரி அசெம்பிள் செய்யும் தொழிற்சாலையை இந்நாட்டில் அமைக்க பார்த்து வருவதாக கிம் கூறினார். இந்த வாகனங்களின் குறைந்த பட்ச ரேஞ்ச் 350 கி.மீ. ஆக இருக்க வேண்டும் என்று Hyundai நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.