பிரதான் மந்திரியின் முத்ரா யோஜனா திட்டம் ஆனது 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

சிறு நிறுவனங்கள், குறு நிறுவனங்கள், நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் இல்லாத, வேளாண் தொழில் சாராத நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் தொகை வழங்கு இந்த திட்டம் ஆனது அறிமுகம் செய்யப்பட்டது.

கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் ஆகியவை மூலம் இந்த முத்ரா கடன்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், இந்த முத்ரா யோஜனா திட்டத்தின் மூலமாக, சிறு நிறுவனம், குறு நிறுவனம் மற்றும் நடுத்தர நிறுவனத்தின் தொழில் மேம்பாட்டிற்காக வங்கிகளின் மூலமாக 3 பிரிவுகளில் கடன் உதவி வழங்கப்படுகிறது.

குறிப்பாக, சிஷு என்னும் பெயரில் 50,000 ரூபாய் வரையிலும், கிஷோர் என்னும் பெயரில் 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரையும், தருண் என்னும் பெயரில் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையும் கடன் உதவி வழங்கப்படுகிறது.

இந்த அற்புதமான திட்டத்தின் மூலம் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் மக்கள் கடன் உதவிகளைப் பெற்று தொழில் முனைவோராக முன்னேற்றம் கண்டுள்ளார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த முத்ரா கடன் திட்டத்தின் மூலமாக 51 லட்சம் தொழில் முனைவோர்கள் பயன்பெற்று உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் சமூக தொழில் முனைவுக்கான விருது வழங்கும் விழாவில் வீடியோ கான்பெரன்ஸ் மூலமாகப் பங்கேற்று பேசும்போது, 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முத்ரா திட்டத்தின் மூலமாக 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலமாக 51 லட்ச புதிய தொழில் முனைவோர் பயன்பெற்று உள்ளதாகவும் அவர் கூறினார்.

Author – Gurusanjeev Sivakumar