தகவல் தொழில் நுட்பம் சார்ந்த 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவைப்படும் நிதி உதவி, சந்தைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டல் போன்ற உதவிகளை வழங்கி 100 யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த புதன்கிழமை அன்று SAMRIDH எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தகியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் கூறும்போது அவர் 20க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டி இருப்பதாகக் கூறினார்.

இது போன்ற நிறுவனங்கள் தங்கள் யோசனைகளை உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கு அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் மிகவும் அவசியமான தேவைகளும் ஒன்றாக இருக்கிறது என்பதை அப்போது புரிந்துகொண்டதாகக் கூறினார். மேலும் அவர் கூறுகையில் “ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி பற்றாக்குறை என்பது பிரச்சனை இல்லை.

ஆனால் ஒரு பொருளை உற்பத்தி செய்வதில் சரியான யோசனையை பெற முடியாதது, தகுந்த செயல்திறன் கொண்ட மனிதவளம் இல்லாமை போன்றவையே அவர்களுக்கு ஒரு நிறுவனமாக அமைவதற்கு மிகப்பெரிய சவாலாக அமைகின்ற விஷயங்கள் என்றார்.

நாம் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான உதவியை வழங்கினால் மதிப்பு கூட்டல் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்” என்றார். இந்த SAMRIDH திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் வரை நிதி உதவி, வழிகாட்டல் போன்றவை 6 மாதங்களுக்கு கிடைக்கும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த அறிய திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.