கடந்த சில நாட்களாக வர்த்தகத்தில் புதிய உச்சத்தை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தை ஆனது இன்று, மீண்டும் ஒரு புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.

இன்று சந்தையின் தொடக்கத்திலேயே ஏற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் ஆரம்பத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் ஆனது 363 புள்ளிகள் அதிகரித்து, 44,245.50 புள்ளிகள் ஆகவும், இதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி ஆனது 101 புள்ளிகள் அதிகரித்து 12,960 எனவும் தொடங்கியது.

தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகளின் வரத்து, கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான சாதகமான அறிக்கை, சர்வதேச சந்தை எதிரொலி உட்பட பல காரணங்களால் இந்திய சந்தைகள் கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வருகிறது. குறிப்பாக வரலாறு காணாத அளவில் உச்சத்தை தொட்டு வருகின்றது.

நிப்டி குறியீட்டிலுள்ள பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ரிலையன்ஸ், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், ஆக்ஸிஸ் வங்கி உட்பட சில பங்குகள் டாப் கெயினர் ஆகவும், இதேபோல் ஹெச்டிஎப்சி லைப், ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் உட்பட சில பங்குகள் டாப் லூசர்கள் ஆகவும் உள்ளது.

அதேபோல், சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ,, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல் உட்பட சில பங்குகள் டாப் கெயினர் ஆகவும், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ் உட்பட சில பங்குகள் டாப் லூசர்கள் ஆகவும் உள்ளது.

13000 புள்ளிகளை தாண்டியது நிப்டி:

இதற்கிடையே தற்போது சென்செக்ஸ் ஆனது 63 புள்ளிகள் உயர்ந்து, 44586 ஆகவும், இதே போல் நிப்டி ஆனது 25 புள்ளிகள் உயர்ந்து, 13,080 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயினுடைய மதிப்பானது பெரிய அளவில் மாற்றமின்றி 74.39 ரூபாய் ஆக காணப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar