உலகநாயகன் என உலக மக்களால் அழைக்கப்படும் மாபெரும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் அவர்கள். சினிமாவில் மட்டுமல்லாது தன் சொந்த வாழ்க்கையிலும் இவர் ஏற்றுக்கொண்டுள்ள கதாபாத்திரங்கள் பல. பல்வேறு காரியங்களில் தம்மை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்ளும் இவர் புதிதாக கதர் ஆடை வர்த்தகத்திலும் கால் பதித்துள்ளார். நம் நாட்டில் நெசவு தொழில் செய்யபவர்களின் கஷ்டத்தை போக்க தம்மால் ஆன முயற்சி எனக்கருதி கதர் ஆடைக்கு என பிரத்தியேக பிராண்ட் ஒன்றை 2020-ம் ஆண்டு ஆரம்பித்தார்.

கதர் ஆடை என்றால் ஒன்று வயதானவர்கள் அணியவேண்டும் அல்லது அரசியலை சேர்ந்தவர்கள் அணியலாம் என்ற எண்ணத்தை மாற்றும் விதத்தில் சர்வதேச டிசைனர்களை கொண்டு புது விதமான நவீன டிசைன்களை உருவாக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதற்காக அவர் காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் அம்ரிதா ராம் அவர்களை நாடினார். இவர் உருவாக்கிய விதவிதமான நவீன கதர் ஆடைகள் தமிழ் பிக்பாஸ் சீசன் 4-ல் மிகப்பிரபலமானது.

KHHK அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமெரிக்காவில்

KH – House of Khaddar பிராண்டில் கைத்தறியில் எல்லா ஆடைகளும் தயாரிக்கப்படுவதோடு We Dye for You என்று பெயரிடப்பட்டு சாயமேற்றுதல் பிரிவையும் அவர் ஆரம்பித்து வைத்துள்ளார். KHHK எனும் லேபிளில் வரும் ஆடைகள் கமல்ஹாசன் அவர்களது சொந்த ஃபேஷன் பிராண்டாகும். அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் இந்த பிராண்டை அதிகாரப்பூர்வமாக 2021 நவம்பர் 16ம் தேதி அவர் அறிமுகப்படுத்தினார்.

பிரம்மாண்ட நடைமேடையில் கண்கவரும் மாடல்கள் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கதர் ஆடைகளில் தோன்றி பார்வையாளர்களை அசத்தினார், உச்சகட்டமாக கமல்ஹாசன் அவர்களும் கதரின் கம்பீரத்துடன் காட்சியளித்தார். இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபலமாகி கதர் ஆடைகளின் மேல் மோகம் கொள்ளவைத்துள்ளது.

House of Khaddar – ஆன்லைன் வர்த்தகம் மற்றும் இணையதளம் அறிமுகம்

தனது அடுத்த கட்ட வர்த்தக விரிவாக்கத்திற்கு இப்போது House of Khaddar( ஹவுஸ் ஆப் கதர்) நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை தளம் தொடங்கப்பட்டுள்ளது. ஆக, இனி பல இளம் தலைமுறையினரை நாம் கதர் ஆடைகளில் காண முடியும். இந்திய பாரம்பரியம், கலாச்சாரம், பெருமை ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நம் கதர் ஆடைகள் புத்தம்புது மிளிர்தலுடன் உலகில் வலம் வரும் விதத்தில் கமல்ஹாசன் khkk.in என்ற இணையதள பக்கத்தை துவங்கியுள்ளார். இணையதளத்தின் முகப்புப் பக்கம் கமல் ஹாசன் House of Khaddar என்ற வார்த்தைகளை தாங்கி கம்பீரமாக ஒளிர்கின்றன.