பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 454 புள்ளிகள் உயர்ந்து 58,795.09ல் நிலைபெற்றது.

நடப்பு மாத காண்ட்ராட்டுகள் கணக்கு முடிப்பதில் இன்று கடைசி நாள். இன்று காலை முதலே பங்கு சந்தை பெரும் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பிற்பகல் வரையில் பங்கு சந்தை இப்படியும் அப்படியும் மாறி மாறி இருந்து வந்தாலும் வர்த்தகம் முடிய குறைவான மணிகளுக்கு முன் ரிலையன்ஸ் பங்குகள் மதிப்பு உயர்ந்து முன்பகலுக்கு நேர்மறையான நிலையை கொடுத்தது. இன்று வர்த்தகம் முடிவுற்ற நிலையில் சர்வதேச தரநிர்ணய நிறுவனமாகிய மூடிஸ் 2022 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்கு வலுப்படும் என்று எதிர்பார்ப்பதாக கூறியது.

இன்றைய நிலவரப்படி சென்செக்ஸ் அட்டவணையில் மொத்தம் 30 முதல் தரப்பு பங்குகள் இருந்தன. அவற்றில் 16 பங்குகள் சரிவையும், 14 பங்குகள் ஆதாயத்தையும் பெற்றன. மார்க்கட் லீடர் 6.10% உயர்ந்து முன்னிலையில் இருந்தது. ITC, இன்போசிஸ், டெக் மஹிந்திரா, கோடக் வங்கி, டைடன் ஆகியவை 1.50% அளவு வரை உயர்வு பெற்றன.

மாருதி சுசூகி, இண்டஸ் இண்டு வங்கி, ICICI, ஹிந்துஸ்தான் யுனிலீர், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, SBI உள்ளிட்ட பல பிரபல நிறுவனப் பங்குகள் சரிவு பட்டியலில் இருந்தன. தேசிய பங்கு சந்தையை பொறுத்த வரை 1143 பங்குகள் ஆதாயத்தையும், 687 பங்குகள் சரிவையும் பெற்றுள்ளன. 50 முதல் தரப்பங்குகளை கொண்டுள்ள nifty ஏற்ற இறக்கங்களை சந்தித்து இறுதியில் 121.20 புள்ளிகள் கூடுதலுடன் 17,536.25-ல் நிலைகொண்டது. மொத்தத்தில் இன்று ரிலையன்ஸ் பங்குகள் மதிப்பு ஏற்றம் பெற்றது குறிப்பிடத்தக்கது.