ஒரு சில வர்த்தக குழுமங்களின் வளர்ச்சி நாடே உற்றுநோக்கும் பிரசித்தியை பெறுகிறது. அந்த பட்டியலில் இடம்பெறுவது மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ். இந்தியா மட்டுமல்லாது சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் பெருமளவு சில்லறை வர்த்தகம் செய்து வருகிறது. தம்முடைய நகைகள் தங்கம், வைரம், பிளாட்டினம் என அனைத்துமே அதற்குரிய பிரத்தியேக தரச்சான்றிதழ்களை பெற்றுள்ளதாய் விற்பனை செய்கிறது. தங்கத்திற்கு BIS, வைரத்திற்கு IGI, பிளாட்டினத்திற்கு PGI, அதே போல் வெள்ளிக்கும் hallmark சான்று என உத்திரவாதத்துடன் தனது விற்பனையை தொடர்கிறார்கள் மலபார்.

சமீபத்தில் தம்முடைய 18வது ஷோரூமை திருப்பூர் மாநகரில் திறந்துள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய இலக்கு 2022 ஜனவரி மாதத்தில் மொத்தம் 22 புதிய ஷோரூம்களை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில்லறை வர்த்தக நிறுவனம் ஒரே மாதத்தில் இத்தனை ஷோரூம்களை துவங்குவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

மலபார் நிறுவனத்தின் கிளைகள் மற்றும் விற்பனை நிலையங்கள்

மொத்தம் 10 நாடுகளில் 280 சில்லறை விற்பனை நிலையங்கள் என்ற பெருமையுடன் உலகின் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனங்களுள் ஒன்றாக தலை நிமிர்ந்து நிற்கிறது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ். தமிழ்நாட்டில் மட்டும் திருப்பூருடன் சேர்த்த 18 கிளைகளை கொண்டுள்ளது.

மேலும் உலகளாவிய விரிவாக்கத்திற்கு தன்னை முழுவதும் தயார் செய்துகொண்டுள்ள மலபார், இந்த ஜனவரி மாதத்திலேயே இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 22 புதிய ஷோரூம்களை திறக்கவுள்ளது என்பது முக்கிய செய்தி. இந்த விரிவாக்கத்திற்கு முதலீடு செய்ய நிர்ணயித்திருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? ரூபாய் 800 கோடி.

மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸின் பிரத்தியேக நகைகள்

ஜொலி ஜொலிக்கும் கண்கவர் ‘மைன்’ வைர நகைகள், வெட்டாத வைரத்தால் செய்த பிரமிக்கத்தக்க கலைநயம் கொண்ட ‘எரா’, விலை மதிப்பு மிக்க கற்களால் செய்யப்பட்ட ‘பிரீசியா’, நேர்த்தியான கைவினை கலைஞர்களின் படைப்புகளான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிபிம்பங்களாக ‘டிவைன்’, குழந்தைகளுக்கான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை அனைத்தும் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்-கே உரிய பிரத்தியேக சிறப்புமிக்க நகைகள்.

வணிகத்தை தாண்டிய சமூக சிந்தனை

தன் வர்த்தகத்தை உயர்த்திக்கொள்வதோடு மட்டுமல்லாது சமூகம் சார்ந்த பிற பொறுப்புகளையும் தன் தோள்களில் ஏற்றி பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். வர்த்தகத்தில் தமக்கு கிடைக்கும் லாபத்தில் குறிப்பிட்ட ஒரு சதவீதத்தை கல்வி, வீட்டு வசதி, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய சமூகப்பணிகளுக்காக செலவு செய்கிறது.