மக்களவையில் எழுந்த கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிட்காயினை நம் நாட்டின் கரன்சியாக அறிவிக்க அரசுக்கு எந்த திட்டமும் கிடையாது என்று கூறினார். மேலும் பிட்காயின் பரிவர்த்தனைகள் தொடர்பான தரவுகள் எதுவும் அரசு சேகரிக்கவில்லை என்றும் கூறினார்.

குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க இருக்கும் மசோதா பல தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கவும், அதிகாரப்பூர்வமான டிஜிட்டல் கரன்சிக்கு RBI ஒப்புதல் அளிப்பதற்கு வேண்டியும் பல வளர்ச்சிகளை கருத்தில் கொண்டும் ஏற்படுத்தப்பட்டது என்றார்.

இந்தியாவில் கிரிப்டோகரன்சிகள் வர்த்தகம் ஏற்புடையதா?

கிரிப்டோகரன்சிகள் வர்த்தகம் இந்தியாவில் நடைபெறுவது பற்றி அரசுக்கு தெரியுமா? அவ்வாறு வர்த்தகத்தில் இருக்கும் கிரிப்டோகரன்சிகள் இந்தியாவில் சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளதா என்று எம்.பி.தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மாநிலங்களின் நிதி அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகம் பற்றிய தகவல்கள் எதையும் சேகரிக்கவில்லை. கிரிப்டோகரன்சிகள் நாட்டில் கட்டுப்பாடற்றவை. மே 31, 2021-ல் RBI ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது அதில் RBI-ன் ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு வாடிக்கையாளரின் விடாமுயற்சி செயல்முறைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் அரசின் விதிமுறைகளுக்கு இணங்க உங்கள் வாடிக்கையாளரை அறிவது (KYC), பண மோசடி எதிர்ப்பு (AML), பயங்கரவாதத்திற்கு நிதி (CFT), பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA), வெளிநாட்டுக்கு பணம் அனுப்புதலுக்கு அந்நிய செலவாணி மேலாண்மை சட்டம் (FEMA) ஆகியவற்றின் கீழ் தொடர்புடைய விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது என்று கூறினால்.

பிட்காயின் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

2008-ம் ஆண்டு சில அடையாளம் தெரியாத புரோகிராமர்களால் பிட்காயின் அறிமுகப்படுத்தப்பட்டது. டிஜிட்டல் கரன்சிகள் எந்த ஒரு வங்கியுடனோ அல்லது அரசாங்கத்துடனோ இணைக்கப்படவில்லை.