கோவிட்-19 தொற்றினால் நடப்பு நிதி ஆண்டில் தனியார் மருத்துவமனைகளினுடைய செயல்பாட்டு லாபமானது 40 சதவீதம் வரை குறையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனை:

ஏனென்றால், நாட்டில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றின் காரணத்தினால் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளினுடைய பில்லிங் ஆனது வெகுவாக குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஒரு அறிக்கையில், கோவிட்-19 தொற்றினால் மக்கள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளை தவிர்த்து கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் 17% வருவாயானது வளர்ச்சியினை பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த மார்ச் மாத இறுதி கட்டத்தில் தொடங்கிய இந்த கோவிட்-19 தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், மத்திய அரசு நாட்டு மக்களை தங்களின் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும், மருத்துவமனைகளுக்கும் அத்தியாவசிய தேவைகக்காக மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

இதன் காரணமாக மக்கள் தங்களுடைய அறுவை சிகிச்சையை தள்ளி வைத்ததால் தனியார் மருத்துவமனைகள் நெருக்கடிப் பாதைக்கு தள்ளப்பட்டன. இதன் காரணமாக தனியார் மருத்துமனைகளுக்கு தங்களின் லாபமானது குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், அதிகரிக்கும் தங்களின் செலவுகள் ஆனது இந்த நிதி ஆண்டில் தனியார் மருத்துவமனைகளினுடைய இயக்க லாபத்தினை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைக்க வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அவசர சிசிக்சையின் வருவாயானது 28 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தொடர்ந்தாலும், ஆனால் இந்த ஊராடங்கில் மிகக் குறைந்த அளவிலான விபத்துகள் மட்டும் தான் நிகழ்ந்தன.

இருப்பினும், கொரோனா தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வரும் வருவாயானது 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை பயன்படும். ஆனால் இவை மற்ற வருவாயினை போல லாபம் கொடுப்பது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டில் இதன் லாபத்தில் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை சரிவுக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar