வாரத்தின் இறுதி நாள் ஆன நேற்று, காலை நேரத்தில் இந்திய பங்கு சந்தைகள் ஆனது சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. இருந்தாலும் இறுதியில் மும்பை பங்கு சந்தையினுடைய சென்செக்ஸ் ஆனது 135 புள்ளிகள் சரிந்து 39,614 ஆகவும், தேசிய பங்கு சந்தை நிப்டி ஆனது 28 புள்ளிகள் சரிந்து, 11,733 ஆக வர்த்தகமானது. ஆனால் 1322 பங்குகள் ஏற்றமடைந்தும், 1222 பங்குகள் சரிந்தும், 167 பங்குகள் மாற்றம் ஏதும் இல்லாமல் முடிவடைந்தது.

நிஃப்டி குறியீட்டிலுள்ள அதானி போர்ட்ஸ் உட்பட சில பங்குகள் ஆனது சிறந்த ஆதாயத்தை பெற்றவராகவும், ஏர்டெல் உட்பட சில பங்குகள் மிகவும் நஷ்டத்தை சந்தித்த நிலையிலும் காணப்பட்டது.

அதே போல் சென்செக்ஸ் குறியீட்டிலுள்ள ரிலையன்ஸ் உட்பட சில பங்குகள் சிறந்த ஆதாயத்தை பெற்றவராகவும், ஐசிஐசிஐ வங்கி உட்பட சில பங்குகள் மிகவும் நஷ்டத்தை சந்தித்த நிலையிலும் காணப்பட்டது.

காலை நேரத்தில் சற்று சரிவுடன் தொடங்கினாலும், பின்னர் ஏற்றம் அடைந்து, மீண்டும் சரிவில் தான் முடிவடைந்தது. மேலும், ஆசிய பங்கு சந்தைகள் ஆனது கடந்த 3 நாட்களாகவே சரிவைக் பெற்று வரும் இந்நிலையில், இந்திய பங்கு சந்தைகள் ஆனது சற்று ஏற்றத்துடன் காணப்பட்டது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டில் கோவிட்-19 தொற்றின் தாக்கமானது மேலும் அதிகரித்து வரும் இந்நிலையில், இது தொற்றின் 2-ம் நிலை பரவல் ஆக இருக்கக்கூடுமோ என்னும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar