இந்தியாவில் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆன முகேஷ் அம்பானி தற்போது அனைத்து வித துறைகளிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார் என்று தாசன் கூற வேண்டும்.

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முகேஷ் அம்பானியினுடைய ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் ஆனது களத்தில் இறங்கிய மூன்று ஆண்டுகளிலேயே முதலிடத்தைத் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி, கோவிட்-19 பாதிப்புகள் நிலவி வரும் இச்சூழலிலும் சர்வதேச அளவிலான அதிகப்படியான முதலீடுகளை திரட்டி வருகிறார் முகேஷ் அம்பானி.

கடந்த சில மாதங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் சில்வர் லேக், பேஸ்புக் உட்பட சில உலகின் முன்னணி முதலீட்டாளர்களிடமிருந்து பல ஆயிரம் கோடி டாலர் முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதே வரிசையில் தற்சமயம் கூகுள் நிறுவனத்திடம் இருந்தும் ஜியோவிற்கு முதலீடு கிடைத்து உள்ளது.

கூகுள் நிறுவனம்:

ஜியோ பிளாட்ஃபார்ஸ் நிறுவனத்தின் 7.73% பங்கை வாங்கி உள்ள கூகுள் நிறுவனம் அதற்காக 33,737 கோடி ரூபாயை செலுத்தி உள்ளது. இது தான் இந்தியாவில் கூகுள் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப் பெரிய முதலீடு ஆகும்.

கடந்த பதினொரு வாரங்களில் மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு விற்பனையின் மூலம் 1.53 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிமூன்று நிதி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் 33% பங்குகளை முகேஷ் அம்பானி அவர்கள் விற்பனை செய்து உள்ளார். இதன் மூலமாக ரிலையன்ஸ் நிறுவனத்தினுடைய கடன் சுமை ஆனது வெகுவாகக் குறைந்து உள்ளது.

2021-ம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் கடன் இல்லாத நிறுவனம் ஆக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்கும் என அம்பானி உறுதி அளித்திருந்தார். அதற்கேற்ப, தொடர்ச்சியாக முதலீடுகளை ஈட்டி வருகிறார்.

Author – Gurusanjeev Sivakumar