கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, காப்பீட்டு விதிகள், வருமான விரி விதிகள், லைசென்ஸ் உள்ளிட்ட பலவற்றிற்கு அக்டோபர் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

1.) லைசென்ஸ்:

வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது, R.C மற்றும் லைசென்ஸ் ஆகியவற்றை ORIGINAL அல்லது அதன் நகல்களை இனி வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவற்றை ஆன்லைனில், DigiLocker அல்லது mParivahan போன்ற செயலிகளில் பதிவு செய்து வைத்திருந்தாலே போதுமானது.

2.) டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு:

RBI-யின் புதிய விதியின்படி வெளிநாட்டுப் பரிமாற்றங்கள், ஆன்லைன் பரிமாற்றங்கள் (online transaction) ஆகியவற்றின் விருப்பத் தேர்வுகள் மற்றும் செலவு வரம்பினை இனி எளிதாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.

3.) மொபைல்போன்:

மோட்டார் வாகன விதி ‘1989’ சட்ட திருத்தத்தின் படி, இனிமேல் வாகனங்களில் மொபைல்போனை வாகனம் ஓட்டுபவருக்கு தொந்தரவில்லாமல் வழிகாட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும்.

4.) எரிவாயு இணைப்புகளுக்கு இனி இலவசம் கிடையாது:

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) என்ற திட்டத்தின்கீழ் மக்களுக்கு இலவசமாக வழங்கி வந்த சமையல் எரிவாயுவின் இணைப்பானது செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இனிமேல் இதற்காக பணம் கொடுத்து தான் எரிவாயு இணைப்பை வாங்கிக் கொள்ள முடியும்.

5.) வெளிநாட்டு நிதி பரிமாற்றத்திற்கு இனி 5 சதவீதம் வரி:

வெளிநாட்டு சுற்றுலா package மற்றும் 7 லட்சம் ரூபாய்க்கு மேலான வெளிநாட்டு நிதி பரிமாற்றத்திற்கு 5% வரியைக் இனி கட்டவேண்டும்.

6.) இனிப்புகளுக்கு இனி கட்டாய காலாவதி தேதி உண்டு:

கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான இனிப்புப் சார்ந்த பொருட்களுக்கும் இனி கட்டாயமாக காலாவதி தேதியை குறிப்பிட வேண்டும். Packing இல்லாமல் தனியாக அதாவது உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கு இந்த விதி பொருந்தும். அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த வீதி அமலுக்கு வந்துள்ளது.

7.) கடுகு எண்ணெய் உடன் இனி மற்ற எண்ணெயை கலக்கக் கூடாது:

கடுகு எண்ணெய் உடன் இனி மற்ற எந்த எண்ணெயையும் கலக்குவது தடை செய்யப்பட்டு உள்ளது. இது சார்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுக்கும் மத்திய உணவுக் கட்டுப்பாட்டு வாரியம் கடிதம் அனுப்பி உள்ளது.

8.) TCS வரி:

E-Commerce நிறுவனத்தினர் விற்பனை செய்யப்படும் பொருட்களுடைய மொத்த வரியின் 1% வருமான வரியைக் கழித்துக்கொள்ள வேண்டும் என வருமான வரித் துறையினுடைய புதிய விதிகள் தெரிவித்து உள்ளன.

9.) டிவிக்களின் விலை உயரும்:

Panel-களின் இறக்குமதி வரி 5% உயர்வதால், டிவிக்களின் விலை உயருகிறது:

10.) சுகாதார காப்பீட்டின் புதிய விதி:

கொரோனா ஊரடங்கு காலத்தின் பிந்தைய சுகாதாரக் காப்பீட்டு விதியில் 17 நிரந்தர நோய்கள் ஆனது விலக்கப்பட்டு உள்ளன. சுகாதாரக் காப்பீட்டின் பிரீமியம் தொகையானது அதிகரிக்கிறது.

Author – Gurusanjeev Sivakumar