மின் பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தலை ஊக்குவிக்க அரசாங்கம் ஊக்குவிப்பு நிதி உதவிகள் சம்பந்தமாக பரிசீலனை செய்து வருகின்றது. இந்த தொழில் வாய்ப்புக்கு மதிப்பிடப்பட்டுள்ள தொகை ரூ.7 லட்சம் கோடி. உள்நாட்டில் தொழில்துறையை சேர்ந்தவர்கள் இதை பயன்படுத்தாத பட்சத்தில் இந்த வாய்ப்பு வெளிநாட்டு விற்பனையாளர்களுக்கு செல்லக்கூடும்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு முன்மொழியும் செயல் திட்டம் என்னென்ன?

ஒரு கட்ட உற்பத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மின் பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்கு தேவைப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உபகரணங்களின் இறக்குமதியின் மீது பாதுகாப்பு அல்லது திணிப்பு எதிர்ப்பு வரிகள் மற்றும் ஐந்தாண்டு வரி விடுமுறை ஆகியவற்றை நமது அரசு முன்மொழிகிறது. இந்த இரட்டை நடவடிக்கைகளால் இறக்குமதிக்கு எதிராக உள்நாட்டு தொழில்துறை சிறப்பாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2 முக்கிய உபகரணங்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உபகரணங்களில் “மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்துதல் அமைப்பு” (Supervisory Control and Data Acquisition System) மற்றும் “கட்டுப்படுத்தி” (Controller)ஆகியவையும் அடங்கும். இவை அதிகம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் உள்ளவை.

பத்தாண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்ட இதே மாதிரி திட்டம்

நம் நாட்டில் இதே போன்ற ஒரு திட்டம் பத்தாண்டுகளுக்கு முன் நீராவி விசையாழிகள் (steam turbines) மற்றும் மின்சார உற்பத்தித் திட்டங்களுக்கான கொதிகலன்கள் (boilers) ஆகியவற்றைன் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக செயல்படுத்தப்பட்டது. இதில் மத்திய மற்றும் மாநில மின் உற்பத்தி நிலையங்கள் மொத்த டெண்டர்களில் தங்கள் உள்நாட்டு உற்பத்தி விதிகளைக் குறிப்பிட்டிருந்தன.