இந்தியாவினுடைய ஜிடிபி விகிதமானது இரண்டாம் காலாண்டில் 7.5% வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, நிபுணர்கள் 10 சதவீதத்திற்கும் மேல் சரியும் என்று கணித்திருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவு சரிவானது இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது.

இது கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாத காலாண்டில் சுமார் 24% வீழ்ச்சி கண்டிருந்தது. இந்நிலையில், இந்த காலாண்டிலும் சற்று சரிவைக் கண்டுள்ளது. இந்நிலையில் இந்திய பொருளாதாரம் ஆனது ரெசசனிற்கு தள்ளப்பட்டு உள்ளது.

உண்மையிலேயே கோவிட்-19 ஆல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரம் ஆனது இரண்டாம் காலாண்டில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதன் பின்னர், இரண்டாம் காலாண்டில் இந்திய பொருளாதாரம் ஆனது வளர்ச்சி பாதைக்கு சென்றாலும், நிபுணர்கள் கணித்த அளவு பெரிய வீழ்ச்சி காணவில்லை என்பது சற்று ஆறுதல் தரும் விதமாக உள்ளது.

இதற்கிடையே 8 முக்கிய துறைகளினுடைய வளர்ச்சி கடந்த அக்டோபர் மாதத்தில் -2.5 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், இது கடந்த ஆண்டு அக்டோபர் மாத்தத்தில் -5.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.

குறிப்பாக நிலக்கரி துறையானது 11.6 சதவீத வளர்ச்சியிலும், இதேபோல், கச்சா எண்ணெய் ஆனது 6.2 சதவீத வளர்ச்சியிலும், இயற்கை எரிவாயு ஆனது 8.6 சதவீத வளர்ச்சியிலும், சுத்திகரிப்பு பொருட்கள் ஆனது -17.0 சதவீத சரிவிலும், பெர்டிலைசர் ஆனது 6.3 சதவீத வளர்ச்சியிலும், ஸ்டீல் ஆனது *- 2.7 சதவீத வளர்ச்சியிலும், சிமெண்ட் ஆனது 2.8 சதவீத வளர்ச்சியிலும், மின்சாரம் ஆனது 10.5 சதவீத வளார்ச்சியிலும் காணப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் சற்று சரிவை சந்தித்து இருந்தாலும், ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாத காலகட்டத்தில் -13 சதவீத சரிவிலும் காணப்படுகிறது. இதேபோல் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாத காலகட்டத்தில் நிதி பற்றாக்குறை ஆனது 119.7 சதவீதம் அதிகரித்து உள்ளது. மேலும், பட்ஜெட்டில் ரூ.7.96 லட்சம் கோடியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், இது ரூ.9.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பரவி வரும் கோவிட்-19 காரணத்தினால் முதல் காலாண்டில், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டிலேயே இந்தியாவினுடைய பொருளாதார வளர்ச்சி ஆனது கடந்த 40 ஆண்டுகளிலேயே இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது.

தற்சமயம் இந்த பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், வளர்ச்சி ஆனது சற்று மெதுவான வேகத்திலேயே உள்ளது. இது சற்று மெதுவான வேகத்திலிருந்தாலும், நிபுணர்கள் கூறுவதைப் போன்று வலுவான வளர்ச்சி ஆக உள்ளது. இருப்பினும் பொருளாதார சரிவிற்கு கோவிட்-19 மட்டும் காரணமல்ல, கொரோனாவிற்கு முன்பாக பொருளாதாரம் ஆனது கடுமையான சரிவைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar