இனிமேல் ATM-ல் இருந்து ரூ.5000 மேலாக பணம் எடுக்கும் போது தாங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

நம் வங்கிக் கணக்கில் இருந்து ATM பயன்படுத்தி பணம் எடுக்க குறிப்பிட்ட அளவிலான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வங்கிகளை பொறுத்து ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றது. மேலும், அதே வங்கியின் ATM எந்திரத்தில் தாங்கள் பணம் எடுக்கும் போது குறிப்பிட்ட முறைகள் இலவசம் எனவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இனிமேல் தாங்கள் 5000 ரூபாய்க்கும் மேலாக பணம் எடுத்தாலே கூடுதல் கட்டணமானது வசூலிக்கப்படும் என்னும் நடைமுறையானது விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இந்த நடைமுறை உங்களின் 5 இலவசப் பரிவர்த்தனைகளில் சேர்க்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய விதிமுறைகளின்படி, நீங்கள் ATM எந்திரத்திலிருந்து ரூ.5000 மேலாக எடுத்தால் மட்டும் தான் இது பொருந்தும். தாங்கள் ஒரு நேரத்தில் ரூ.5000 மேலாக பணம் எடுக்கும் போது ரூ.24 செலுத்த வேண்டியதாயிருக்கும். தற்போது, ATM-ல் இருந்து 5 முறை நீங்கள் இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ள முடியும். அதன் பின்னர் இனி 6-வது பரிவர்த்தனைக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும்.

ATM கட்டணம் தொடர்பான மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த RBI குழு அதன் பரிந்துரைகளைத் சமர்ப்பித்துள்ளது. எனவே, இதன் அடிப்படையில் வங்கிகள் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் ATM கட்டணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

மேலும், 10 லட்சத்திற்கு குறைவாக மக்கள் தொகையுள்ள நகரங்களில் ATM பரிவர்த்தனைகளை அதிகரிக்க செய்வது குறித்து இந்தக் குழுவானது வலியுறுத்தியுள்ளது. அதே போல, பெரும்பாலான மக்கள் சிறிய தொகைகளை மட்டும் தான் ATM-களில் எடுக்கின்றார்கள்.

தற்போது சிறிய நகரங்களில் 5 முறை மட்டும் தான் இலவசமாகப் பணமெடுக்க முடியும். புதிய பரிந்துரைகளின்படி, சிறு நகரங்களில் உள்ளவர்கள் மற்ற வங்கியின் ATM-களில் ஒவ்வொரு மாதங்களிலும் 6 முறை பணம் எடுப்பதற்கு சலுகை கிடைக்கும்.

மும்பை, டெல்லி, பெங்களூர் போல் உள்ள பெரிய நகரங்களில், ஒரு மாதத்தில் மூன்று முறை ATM-களில் இருந்து பணம் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் 4-வது முறை பணம் எடுக்கும் போது அதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar