இந்தியா-சீன எல்லையின் பிரச்சனை காரணத்தினால் நாட்டு மக்கள் பலர் சீன தயாரிப்புகள், சீனப் பொருட்களின் மீது எதிர்ப்புகளை காட்டி வரும் இந்த சூழ்நிலையில், சீனாவில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் சீன பொருட்களைக் வைத்து வர்த்தகம் செய்வதற்கு தடை செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளார்கள்.

சீன பொருட்களுக்கு தடை:

இதன் காரணமாக இந்திய வர்த்தகர்கள் செய்துள்ள முடிவால் வருகின்ற தீபாவளியில் சீன ஏற்றுமதியாளர்களுக்கு கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி மதிப்புடைய வர்த்தகம் பாதிப்படையும் என நாட்டின் வர்த்தக அமைப்பான, CAIT அமைப்பில் உள்ள தேசிய தலைவர் பிசி பார்தியா அவர்கள் தெரிவித்து உள்ளார்.

தீபாவளி காலகட்டத்தில் மட்டும், இந்தியாவில் ரூ.70,000 கோடி மதிப்புடைய வர்த்தகமானது நடைபெறும். அதில் சுமார் ரூ.40,000 கோடி மதிப்புடைய பொருட்கள் சீனவைச் சேர்ந்த தயாரிப்புகள் அல்லது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஆகவும் இருக்கும். ஆனால், இந்த ஆண்டுத் தீபாவளியில் வர்த்தகர்கள் சீன பொருட்கள் இறக்குமதி செய்யக் கூடாது என தடை செய்வதற்கு முடிவெடுத்துள்ள நிலையில், கிட்டத்தட்ட ரூ.40000 கோடி மதிப்புடைய வர்த்தக இழப்பானது சீனாவில் எதிர்கொள்வதற்கு நேரிடும் என கூறப்படுகிறது.

எனினும், இந்திய எல்லையில் சீன ராணுவத்தினருடைய அத்துமீறிய தாக்குதலில், இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் இரு நாட்டு அரசுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், இந்திய நாட்டு மக்களிடையேயும் அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், எல்லா இந்திய வர்த்தகர்களின் அமைப்பான, CAIT அமைப்பு சீன பொருளை இறக்குமதி அல்லது விற்பனைகள் செய்யவே கூடாது என்று முடிவெடுத்துள்ளது.

இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த வர்த்தகர்கள், தீபாவளிக்கு தேவைப்படும் அனைத்துவித பொருளையும் தேவையான அளவிற்கு அதிகமாக தான் கையில் இருப்பு வைக்கத் துவங்கி உள்ளார்கள். மேலும், உள்நாட்டு உற்பத்தியாளர்களின், சிறு குறு தொழிற்சாலையிலும் உற்பத்தியினை அதிகப்படுத்த வேண்டும் என CAIT அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த பண்டிகை காலகட்டத்தில் கோவிட்-19 பாதிப்பினுடைய காரணத்தினால் ஆன்லைன் வர்த்தகச் சந்தை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது 70% வரையிலாக வளர்ச்சி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆன்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது 28 மில்லியன் ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு இதன் மதிப்பு 45 முதல் 50 மில்லியன் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar