ஆம், டெஸ்லா தலைமை செயல் அதிகாரி Elon Musk கடந்த திங்களன்று இந்தியர்களின் அறிவுத்திறனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். ட்விட்டர் சமூக ஊடக வலைத்தளத்திற்கு புதிய CEO-வாக பொறுப்பேற்றிருக்கும் பராக் அகர்வாலை பற்றி பேசுகையில் அவர் இந்தியர்களின் அறிவுத்திறனால் அமெரிக்கா லாபமடைகிறது என்று கூறினார்.

முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்தியர்களே

உலகளவில் கணினி மற்றும் மின்னணு சம்பந்தப்பட்ட துறையில் கோலோச்சிவரும் முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அடோப் மற்றும் ஐபிஎம் போன்ற பல்வேறு நிறுவனங்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரையே தலைமை நிர்வாக அதிகாரிகளாக கொண்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ட்விட்டருடன் அகர்வால்

2011-ம் ஆண்டு இந்நிறுவனத்துடன் இணைந்த அகர்வால் 2017-ல் CTO ஆனார். அந்த நிறுவனம் இப்போது வளர்ச்சியை நோக்கி செல்லவிருக்கிறது மேலும் சுதந்திரமான பேச்சிலிருந்து விலகி இருக்கவும் முனைப்படும் இந்நேரத்தில் அகர்வால் ட்விட்டரை தம் கட்டுப்பாட்டில் எடுக்கிறார்.

அகர்வால் குறித்து நம்பிக்கை அளிக்கும் டார்சி

CEO பதவியிலிருந்து விலகிய டார்சி ஊழியர்களுக்கு கூறிய செய்தியில் “சிக்கலான சமயம் ஏற்படும் போதெல்லாம் அவற்றிற்கு உரிய தீர்வு காண மிகவும் உறுதுணையாக இருந்தவர் அகர்வால். அவர் இந்நிறுவனத்திற்கு அதிக உதவிகள் செய்துள்ளார். தன் மனதார மிகச்சிறந்த எண்ணத்துடன் அவர் தலைமை வகிப்பார். நான் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிக ஆழமானது” என்று கூறியுள்ளார்.