சிறு தொழில்களின் மூலமாக சுய வேலை வாய்ப்பினை கிராமங்களிலும், நகரங்களிலும் உருவாக்குகின்ற நோக்கத்தில் ‘பிரதம மந்திரி ரோஸ்கார் யோஜனா’ & ‘கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்’ ஆகிய இரண்டும் இணைத்து 2008-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் PMEGP.

இந்த திட்டத்தின் கீழாக தொழில்முனைவோர், கிராமம் / நகரங்களில் வசித்து வரும் வேலை இல்லாதவர்களை ஒன்றுசேர்த்து அவர்களின் இடங்களிலேயே சுய வேலைவாய்ப்பினை மத்திய அரசு உருவாக்கி தருகின்றது.

மேலும், இந்த திட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களுடைய சொந்த வாகனம் வாங்குவதற்கு அவர்கள் இதில் கடன் வாங்க முடியும். 30 சதவீதம் மானியத்துடன் கூடிய 5 லட்சம் ரூபாய் வரை தனிநபர்களுக்கான கடன் உதவிகள் வழங்கப்படுகின்றது.

இந்த திட்டத்தினுடைய பயன்கள் தொடர்பான விஷயங்கள் நிறைய பேருக்கு தெரியாததன் காரணத்தினால் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடிவதில்லை. ஆனால், இந்த திட்டத்தை பயன்படுத்தி மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்கள், கிராமப்புற மக்கள் அதிக அளவில் பயன் அடைய முடியும்.

மேலும், இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க http://www.kviconline.gov.in/pmegpeportal/jsp/pmegponline.jsp என்னும் முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம்.

Author – Gurusanjeev Sivakumar