RBI போர்ட்டலில் தங்க பத்திரங்கள்

இதுவரை சிறு நிதி வங்கிகள், பேமெண்ட் வங்கிகள் தவிர்த்து பிற வங்கிகள், SHCIL, நியமிக்கப்பட்ட தபால் அலுவலகங்கள், அங்கீகாரம் பெற்ற பங்குச் சந்தைகள் – NSE & BSE ஆகியவற்றின் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த பத்திரங்கள் இப்போது RBI போர்ட்டலில் கிடைக்கும்.

RBI ரீடெயில் டைரக்ட் ஸ்கீம் அறிமுகம்

சென்ற மாதம் நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி RBI ரீடெயில் டைரக்ட் ஸ்கீம்-ஐ அறிமுகப்படுத்தி இனி எந்த ஒரு தனி நபரும் இந்த போர்டலின் வழியே ட்ரெஸரி பில், டேட்டட் செக்யுரிட்டிஸ், SGB & SDLs ஆகியவற்றை முதன்மை மற்றும் இரண்டாம் சந்தையிலிருந்து பெறலாம் என்று அறிவித்தார்.

தி ஸாவேரின் கோல்ட் பாண்ட் 2021-22 – சீரிஸ் VIII, டிச 3, 2021 வரை

கடந்த வியாழனன்று “தி ஸாவேரின் கோல்ட் பாண்ட் 2021-22 – சீரிஸ் VIII-வின் சப்ஸ்கிரிப்ஷன் டிசம்பர் 3, 2021 வரை திறந்திருக்கும் என்றும் அது RBI-ன் https://rbiretaildirect.org.in இணையதளத்தில் ரீடெயில் டைரக்ட் போர்டல் மூலம் கிடைக்கப்பெறலாம் என்றும் RBI அறிவித்துள்ளது.

RDG (Retail Direct Gilt Account) கணக்கு

பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டத்தின்படி ஒரு தனிநபர் RDG (Retail Direct Gilt Account) கணக்கை ரிசர்வ் வங்கியில் திறக்கலாம். அந்த கணக்கு விபரங்கள் அவருடைய சேமிப்பு கணக்குடன் இணைக்கப்படும். அரசாங்க பத்திரங்களை வழங்குதல் மற்றும் இரண்டாம் நிலை சந்தை நடவடிக்கைகளில் பங்கேற்க போன்றவற்றில் இந்த RDG கணக்கை உபயோகிக்கலாம்.