NMP அதாவது தேசிய பணமாக்க பைப்லைன் திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் 25 விமான நிலையங்கள் சொத்து பணமாக்குதலுக்கென்று மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தகவல் வந்துள்ளது. இவற்றில் தமிழகத்தின் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சென்னை ஆகிய விமான நிலையங்களும் அடங்கும்.

விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுகிறதா?

அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 30-35 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முன்மொழிவு அரசிடம் உள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் மிமி சக்ரபர்த்தி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் டாக்டர் வி.கே.சிங். அவர் கூறியதாவது – “National Infrastructure Pipeline (NIP)-ன் கீழ் விமானநிலைய சொத்துக்களை பணமாக்குதலுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டளைவிதிகள் ஆரம்பகட்டத்தில் 0.4 மில்லியனுக்கு அதிகமான வருடாந்திர பயணிகளை நிதியாண்டு 2019-20-ல் கொண்ட விமான நிலையங்கள் மற்றும் National Infrastructure Pipeline (NIP)-க்கு ஏற்ப கணிசமான நடப்பு மற்றும் முன்மொழியப்பட்ட மூலதன செலவுத் திட்டம் போன்றவை கொண்டிருக்கும் விமான நிலையங்கள் ஆகியவற்றிற்கு பொருந்தும்.”

இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களை பணமாக்குவதன் வாயிலாக நிதியாண்டு 2025 வரை தோராயமாக ரூ.27,782 கோடிகள் திரட்டுவதே மத்திய அரசின் திட்டம் என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அரசு தெரிவித்திருந்தது.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் ஈட்டிய லாபம் மற்றும் நஷ்டம்

நாடு முழுவதும் உள்ள 137 விமான நிலையங்களில் நான்கு நிலையங்களை தவிர மற்ற அனைத்தும் கோவிட்-19க்கு பிறகு தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்துவருகின்றன. இன்னும் சொல்லப்போனால் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மிகப்பெரிய அளவு நஷ்டத்தை அதாவது ரூ.317 & ரூ.331 கோடிகள் சந்தித்தன. கோவா போன்ற சில விமான நிலையங்கள் தவிர மற்றவை ஈட்டிய லாப நஷ்டங்களை பார்த்தால் 2019-20ம் நிதியாண்டில் ரூ.146 கோடி லாபமாகவும், 2020-21-ல் ரூ.118 கோடி நஷ்டமாகவும் உள்ளது. மொத்தத்தில் பல விமான நிலையங்கள் கடந்த 3 ஆண்டுகளில் தொடர் இழப்புக்கு ஆளாகியுள்ளன.” என்று கூறியுள்ளார்.

விருது பெற்ற ஆறு விமான நிலையங்கள்

AAIக்கு சொந்தமாக மொத்தம் 136 விமான நிலையங்கள் உள்ளன. அதில் 7- உடன் கூட்டு முயற்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீபத்தில் அஹமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய 6 விமான நிலையங்களுக்கு பொது-தனியார் கூட்டாண்மையின் (PPP) கீழ் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் மேம்பாட்டிற்காக 50 வருட காலத்திற்கு விருது வழங்கியுள்ளது.