பங்கு சந்தை முதலீட்டாளர்களால் விரும்பப்படும் பல தளங்களில் இப்போது வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது Upstox. முதலீட்டாளர்கள் எவ்விதத்திலும் சிரமம் அடையக்கூடாது என்பதில் கவனம் கொண்டு தனது தளத்தை எளிமையாக வடிவமைத்துள்ளது என்றே சொல்லலாம். கடந்த அக்டோபரில் மட்டும் இத்தளம் தனது வாடிக்கையாளர்களை 1 மில்லியன் அதிகரிக்கச்செய்து மொத்த எண்ணிக்கை 7 மில்லியனுக்கும் அதிகம் என்று பெருமையுடன் கூறுகிறது. மேலும் 2022 நிதியாண்டில் கடைசிக்குள் 10 மில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்தி கொடுப்பதில் முன்னோடி தளம்

இன்று அன்றாட பயன்பாட்டில் உள்ள Whatsapp வழியாக IPO முதலீடு செய்தல், demat கணக்குகளை துவங்குதல் ஆகியவற்றிற்கு இப்போது Upstox அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே Upstox-ல் பதிவு செய்துள்ள பயனாளிகள் மற்றும் பதிவு செய்யாதவர் ஆனால் வேறு தரகர்களிடம் கணக்கு வைத்திருப்பவர் ஆகிய அனைவருக்கும் இச்சேவை திறந்திருக்கும். ஒரு புதிய பிராண்டை அறிமுகப்படுத்திய பிறகு இத்தகைய புதிய சேவைகளை பயனீட்டாளர்களுக்குரிய தேவையான வசதிகளுடன் வழங்க உள்ளது. புதுப்பிக்கப்பட்ட Upstox தளத்தின் மூலம் முதலீட்டாளர் வெகு சுலபமாக செயல்பட முடியும், அநேக முதலீட்டு தேர்வுகள், சந்தை நுண்ணறிவு போன்ற சிறப்பம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பயனாளர் தனது வாட்ஸ் அப் சேட் விண்டோவை விட்டு வெளியேறாமலேயே IPOவில் இணையலாம். இந்த முன்னேற்றத்தால் 5 மடங்கு வளர்ச்சி எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tab-ஐ கிளிக் செய்யுங்கள் வேண்டும் தகவல்களை பெறலாம்

ஒரு சில நொடிகளிலேயே இப்போது Upstox கணக்கை வாட்ஸ் அப் வழியாக துவங்கலாம். பயனாளர் தமக்கு தேவைப்படும் தகவல்களை பெறவும், FAQ-வை அடையவும் ‘Upstox Resources’ மற்றும் ‘Get Support’ ஆகிய tab-களை அழுத்தினாலே போதும். அனைத்தும் எளிதில் பெற முடியும்.

2022 இறுதிக்குள் 10 மில்லியன் வாடிக்கையாளர்கள் – தீவிர பயணம்

ஒரு வாடிக்கையாளரின் அதிக பட்ச எதிர்பார்ப்பு – இயக்குதலில் மிக எளிய முறை, முன்னணி தொழில்நுட்பம், தேவைப்படும் பல சிறப்பம்சங்களை கொண்டது, சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் விதத்தில் நுண்ணறிவு உதவி, தேர்வுகள் அதிகம் இருப்பது இப்படி பல.

தன் வாடிக்கையாளர்களை திருப்தி அடையச் செய்தே அவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று Upstox நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வாட்ஸ் அப் வழி செயல்பாடு என்ற இந்த புதிய இணைப்பு நிச்சயம் பயனாளர்களுக்கு உதவியாக இருக்கும், ஏனெனில் இந்தியாவில் அனைவரும் மிக அதிக அளவில் உபயோகிப்பது வாட்ஸ் அப். இந்தியாவில் வாடிக்கையாளர்களை இன்னும் அதிகரிக்க செய்து முதலீடு செய்யும் ஆர்வத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என்ற நோக்குடன் இந்நிறுவனம் செயல்படுகிறது. தற்போது இருக்கும் 7 மில்லியன் என்ற வாடிக்கையாளர் எண்ணிக்கையை 2022 இறுதிக்குள் 10 மில்லியன்களாக உயர்த்தி காட்ட வேண்டும் என்று குறிக்கோள் கொண்டுள்ளோம் என்று கூறுகிறார் Upstox நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷ்ரினி விஸ்வநாத்.

வாட்ஸ் அப் வழியாக Upstox பரிவர்த்தனை செய்வது எப்படி

முதலில் சரிபார்க்கப்பட்ட Upstox ப்ரொபைல் எண் 9321261098-ஐ வாடிக்கையாளர் தனது கைபேசியில் உள்ள Contacts-ல் இணைப்பு படுத்தி கொள்ள வேண்டும். வாட்ஸ் அப் வழியாக IPOவில் முதலீடு செய்யும் முறை –
Upstox வாட்ஸ் அப் எண் 9321261098-வில் உள்ள வாட்ஸ் அப் சேட் BOT ‘Uva’-க்கு ஒரு ‘Hi’ அனுப்ப வேண்டும்
வாட்ஸ் அப் சேட் BOT ‘Uva’-வை பயன்படுத்தி ‘IPO Application’-ஐ கிளிக் செய்ய வேண்டும் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை டைப் செய்து பிறகு OTP எண்ணையும் டைப் செய்ய வேண்டும்
’Apply for IPO’-ஐ கிளிக் செய்ய வேண்டும் சப்ஸ்கிரைப் செய்ய விரும்பும் IPO-வை கிளிக் செய்ய வேண்டும்

வாட்ஸ் அப் வழியாக Upstox கணக்கு துவங்கும் முறை

வாட்ஸ் அப்பில் ‘Open an Account’-ஐ கிளிக் செய்ய வேண்டும்
மொபைல் எண்ணை டைப் செய்து பின் OTP எண்ணை டைப் செய்ய வேண்டும்
மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பின் மின்னஞ்சல் OTP எண்ணை டைப் செய்ய வேண்டும்
பிறந்த தேதி கொடுக்க வேண்டும்
பான் கார்டு விபரம் கொடுக்க வேண்டும்

Bot பயனாளியை Upstox பக்கத்திற்கு கொண்டு செல்லும், அங்கு சில அடிப்படை விபரங்கள் பெறப்பட்டவுடன் இந்த செயல்முறை முடிவடையும். வாட்ஸ் அப் சேட் வழியாக எந்த ஒரு ஆவணங்களும் இணைக்கப்பட தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.