வர்த்தக விரிவாக்கம் மற்றும் புதிய வர்த்தகத்தை சந்தையில் ஏற்படுத்துதல் இந்த எண்ணமே ஒவ்வொரு முன்னணி நிறுவனமும் புதிய புதிய ஸ்ட்ராட்டஜிகளை கையாள்கிறது. ஐடி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான டெக் மஹிந்திரா இப்போது இதையேதான் ஃபாலோ செய்துள்ளது. $62 மில்லியன் நம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 66 கோடி மதிப்பில் ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனத்தை தனதாக்கியுள்ளது டெக் மஹிந்திரா.
ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனம் பலம் மற்றும் வருமானம்
2018-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் இப்போது சுமார் 1750 பணியாளர்களை கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர் சேவை என்பதில் பல புதிய முயற்சிகளை உருவாக்கியதே இந்நிறுவனத்தின் பலம். ஒர்க் அட் ஹோம் வாடிக்கையாளர் அனுபவ மேலாண்மை சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. டிசம்பர் 2020-ல் $17 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது ஆக்டிவஸ் கனெக்ட்.
டெக் மஹிந்திரா கணக்கின்படி இந்த நிறுவனத்தின் மூலம் கஸ்டமர் கேர் சென்டரில் பெரிய அளவில் வர்த்தக விரிவாக்கம் செய்ய முடியும். workplus சேவைகளையும், CX போர்ட்போலியோ சேவைகளை வலிமைப்படுத்தவும், chat, email, phone, text, video & social media என்று பல வழிகளிலும், பல மொழிகளிலும் சேவையை தொடரவும் முடியும் ஆக்டிவஸ் கனெக்ட் நிறுவனம் பெருமளவு உதவும்.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டெக் மஹிந்திரா பங்குகள் விலை
இந்த ஆண்டு ஜூன் 30 முதல் 6 மாதங்களில் இந்நிறுவனத்தின் வருமானம் $21.8 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டெக் மஹிந்திரா பங்குகள் விலை 2.26% சரிந்து 1592.90 ரூபாய் வரையில் விற்பனையானது.