வருமான வரித் தாக்கல் செய்யும் போது பங்கு வர்த்தகம் சார்ந்த ரசீது அடிப்படையிலான தகவலை இனி தெரிவிக்க வேண்டியதில்லை என வருமான வரித்துறை தெளிவுபடுத்தி உள்ளது.

வருமான வரித் தாக்கல்:

வருமான வரித் தாக்கலின் போது, பங்கு வர்த்தகர்கள் மற்றும் தின வர்த்தகர்கள் தாங்கள் வாங்கியவை, விற்றவை என ஒவ்வொரு பங்குகள், சரக்கு சார்ந்த தகவலை ரசீது மூலமாக தெரிவிக்க வேண்டும் என கடந்த சில நாட்களாய் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், பரிவர்த்தனைகள் தொடர்பான ரசீது அடிப்படையிலான தகவலை தெரிவிக்க தேவை இல்லை என வருமான வரித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டு உள்ள தகவலில், “பங்கு வர்த்தகர்கள்/தின வர்த்தகர்கள் 2020-2021 ஆம் ஆண்டுக்கு வருமான வரி தாக்கலின் போது ரசீது அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் விவரங்களை அளிக்க வேண்டும் என சில ஊடகத்தில் செய்திகள் வெளியாகின.

பங்கு வர்த்தகத்தின் மூலமாக கிடைக்கும் வருமானங்கள் குறுகிய கால மூலதன லாபமாகவோ அல்லது தொழில் வருமானமாகவோ கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஏனென்றால், சம்பந்தப்பட்ட பங்குகள் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலகட்டத்திற்கு மட்டுமே அவர்கள் தங்கள் வசம் வைத்திருக்கின்றார்கள்.

ஒரு வருடத்திற்கும் மேல் தங்களிடம் இருக்கும் பங்குகளை மட்டுமே ரசீது அடிப்படையில் தகவல்களை தெரிவிக்க வேண்டும். குறுகிய கால பங்குகளுக்கு ரசீது சார்ந்த தகவலை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாக, தற்சமயம் பரப்பி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை தான் என கூறப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar