லட்சுமி விலாஸ் வங்கியில் மாதம் ஒன்றுக்கு ரூ.25000-க்கு மேல் எடுக்கக்கூடாது என மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி:

சென்னையைத் தலைமையிடமாய் கொண்டு செயல்பட்டு வருகின்ற லட்சுமி விலாஸ் வங்கி, நாட்டில் 566 வங்கி கிளையையும், 918 ATM-களையும் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாய் இந்த வங்கி மிகவும் மோசமாகச் செயல்பட்டு வருகின்றது.

குறிப்பாக, சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு மட்டும் கடன் வழங்கி கொண்டிருந்த இந்த வங்கி, தற்போது பெரு நிறுவனங்களின் துறைகளுக்கும் கடன் வழங்கி வாராக் கடனின் பிரச்சினையில் சிக்கியது. இவ்வங்கியின் வாராக் கடன்கள் ஆனது 2020 மார்ச் மாத கால நிலவரத்தின்படி 25.39 % ஆக அதிகரித்தது.

மேலும், வாராக் கடன் பிரச்சினை மட்டுமின்றி லட்சுமி விலாஸ் வங்கியினுடைய டெபாசிட் தொகையானது குறையத் தொடங்கியது. இவ்வங்கியினுடைய நிலையான வைப்புத் தொகை ஆனது 31,000 கோடி ரூபாயிலிருந்து, 21,000 கோடி ரூபாயாகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக கடந்த 2019 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவ்வங்கியை சீரமைப்புத் திட்டத்தின் கீழாக மத்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.

மேலும், இந்த திட்டத்தின் கீழாக கொண்டு வரப்படும் வங்கிகள் ஆனது ரிசர்வ் வங்கியினுடைய அனுமதி பெறாமல் பெரிய கடன்கள் வழங்கவோ, பெரிய டெபாசிட் தொகையைப் பெறவோ முடியாது. இவ்வங்கியை டிபிஎஸ் வங்கி உடன் இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்தகைய சூழலில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி வரை லட்சுமி விலாஸ் வங்கியை மொரட்டோரியத்தின் கீழாக கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இவ்வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்கள் மாதம் ஒன்றுக்கு அதிகப்படியாக 25,000 ரூபாய் மட்டும் தான் WITHDRAW செய்ய முடியும். அதை மீறி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவச் செலவு, திருமணச் செலவு, கல்விச் செலவுகள் போன்ற அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெற்று ரூ.25000 மேல் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar