இந்த கோவிட்-19 ஊரடங்கு காலகட்டத்தில் கூட பல ஆயிரம் கோடி முதலீடை ஈர்த்துள்ளது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ். முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1.50 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்த நிலையில், தற்சமயம் அந்த பட்டியலில் ரிலையன்ஸ் ரீடெயில் வர்த்தகமும் இணைந்துள்ளது.

சமீப காலத்தில் முகேஷ் அம்பானியினுடைய ஜியோ மார்ட் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனத்திற்கு சில்லறை வர்த்தக கடைகள் ஆனது இந்தியா முழுவதிலும் இருந்தாலும், ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் சமீபமாக களமிறங்கியது.

இது அமேசான், வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக வர்த்தக போர் ஆக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முகேஷ் அம்பானி எந்த தொழிலில் களமிறங்கினாலும், அதில் போட்டியாளர்களை விஞ்சி சிறந்து விளங்குவது தான் அவரின் பானி.

சிறந்த உதாரணமாக வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் பல வருடமாக தொலைத்தொடர்பு துறையில் இருந்தாலும், அதன் பின்பு வந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று தொலைத் தொடர்பு துறையில்முதல் இடத்தில் உள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்:

மேலும், ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்து வந்த பல நிறுவனங்கள் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்திலும் முதலீட்டை செய்துள்ளது. அதுமட்டுமின்றி, சில்வர் லேக் நிறுவனம் செப்டம்பர் 25-ம் தேதி அன்று ரூ.7500 கோடியை முதலீடு செய்துள்ளது.

மேலும், சில்வர் லேக் நிறுவனத்தினுடைய துணை முதலீட்டாளர்கள் அக்டோபர் 9-ம் தேதி அன்று ரூ.1875 கோடியும், கேகேஆர் நிறுவனம் அக்டோபர் 14-ம் தேதி அன்று ரூ.5550 கோடியையும் முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், அர்பன் லேடர் ஹோம் டெகார் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் ரூ.182 கோடியை முதலீடு செய்து அந்நிறுவனத்தின் 96% பங்குகளை வாங்கி உள்ளது . மீதமுள்ள 4% பங்குகளை வாங்க இந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அர்பன் லேடர் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் காரணமாகவும், அதுமட்டுமின்றி ஆன்லைன் பர்னிச்சர் துறையில் நுழைவதால், இத்துறையை சார்ந்த மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Author – Gurusanjeev Sivakumar