ரிசர்வ் வங்கி ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் சிக்கலுக்குட்பட்ட நிதி சேவைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தபின் அதனை திவால் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ய இருப்பதாக திங்கட்கிழமை அறிவித்துள்ளது. நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களாலும், பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தவறுகளால் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

RBI கைப்பற்றும் மூன்றாவது ஷேடோ லெண்டர் நிறுவனம்

DHFCL, ஸ்ரீ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவற்றிற்கு பிறகு ரிசர்வ் வங்கி கைப்பற்றும் 3வது ஷேடோ லெண்டர் நிறுவனம் ரிலையன்ஸ் கேபிடல்.

ரிலையன்ஸ் கேபிடல் புது நிர்வாகி

நாகேஸ்வர ராவ் Y, இவர் பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் முன்னாள் நிர்வாக இயக்குனராக இருந்தவர். இவரை இந்நிறுவனத்தின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஒழுங்குமுறை ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் கேபிட்டலின் பத்திரதாரர்கள் முறையீடு

இந்த முடிவுக்கு மேலும் ஒரு காரணம் ரிலையன்ஸ் கேபிட்டலின் பத்திரதாரர்கள் பலர் கடந்த அக்டோபர் 4ம் தேதி RBI-யிடம் ஒரு முறையீடு வைத்தனர். சொத்துக்களை பணமாக்குவதில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் நிறுவனம் சரிவர ஒத்துழைக்காதது போன்ற சில காரணங்களால் ரிலையன்ஸ் நிறுவனத்தை திவால்நிலைக்கு பரிந்துரை செய்யவேண்டும் என முறையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் காலாண்டில் ரிலையன்ஸ் கேபிடலின் வருவாய்

ரிலையன்ஸ் கேபிடலின் முதல் காலாண்டு செப்டம்பர் மாத ஒருங்கிணைந்த (consolidated) வருவாய் கணக்கெடுக்கும்போது, இழப்பு ரூ.1156 கோடியாக இருந்தது, முந்தைய ஆண்டு இழப்பு ரூ.2534 கோடியை விட இது குறைந்துள்ளது. அநேகமாக நிதி மற்றும் முதலீடுகளிலும், வணிக நிதி-களிலும் தான் அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிகிறது.

ரிலையன்ஸ் கேபிடலின் நிர்வாக குழு கலைப்பு

மொத்தத்தில் ரிலையன்ஸ் நிர்வாக குழுவால் தகுந்த முறையில் பொறுப்புகளை நிறைவேற்ற இயலாத காரணத்தினாலும், பணம் செலுத்துவதில் இருந்த தவறுகள், பல பத்திரதாரர்களுக்கு சொத்துக்களை பணமாக்குவதில் ஏற்பட்ட சிக்கல், வங்கிகளிடம் வாங்கிய கடன்களுக்கு சரியாக வட்டியை திருப்பி செலுத்தாது ஆகிய அனைத்தையும் அடிப்படையாக கொண்டு ரிலையன்ஸ் நிர்வாக குழு கலைக்கப்பட்டுள்ளது என்று RBI அறிக்கையில் தெரிகிறது.