இந்தியாவினுடைய முன்னணி தனியார் வங்கியில் ஒன்றாக கருதப்படும் யெஸ் வங்கியின் பங்குகள் ஆனது கடந்த ஒரு வார காலத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 18% வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

யெஸ் வங்கி:

இதன் காரணமாக வெள்ளிக்கிழமையின் வர்த்தகத்தின்’ முடிவில் ஓரளவு உயர்வினை மட்டும் சந்தித்த யெஸ் வங்கியினுடைய பங்குகள் ஆனது சனிக்கிழமையின் வர்த்தகத்தில் முதலீட்டாளர்களினுடைய ஈர்ப்பின் காரணத்தினால் யெஸ் வங்கியின் பங்குகள் ஆனது அதிப்படியான முதலீட்டினை பெற்று 1.53% வளர்ச்சியினை அடைந்து ஒரு பங்கின் விலை ஆனது ரூ.14.57 ஆக உயர்ந்துள்ளது.

2020-ம் ஆண்டில் யெஸ் வங்கி சந்தித்த பல பிரச்சனைகளின் காரணத்தினால் இந்த வங்கியின் பங்குகள் ஆனது கிட்டதட்ட் 68% வீழ்ச்சியினை சந்தித்த நிலையில், கடந்த ஒரு வார காலத்தில் மட்டுமே சுமார் 18% வளர்ச்சியினை அடைந்துள்ளது.

மேலும், கடந்த வார அமெரிக்கத் தேர்தலின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் அதிகப்படியான முதலீடுகள் ஆனது குவிந்த காரணத்தினால் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் சிறந்த வளர்ச்சியினை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, இத்தகைய அதிரடி மிக்க வளர்ச்சி காலத்தில் யெஸ் வங்கி MSCI இந்தியாவினுடைய குறியீட்டில் சேர்க்கப்பட்டதன் காரணமாக அதிரடி வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.

MSCI இந்தியாவினுடைய குறியீடானது மறுசீரமைப்புச் செய்யப்பட்ட சமயத்தில் யெஸ் வங்கி உடன் சேர்த்து கிட்டதட்ட பன்னிரண்டு நிறுவனங்கள் ஆனது இந்தக் குறியீட்டின் கீழாக சேர்க்கப்பட்டுள்ளதாக MSCI தெரிவித்து உள்ளது.

இந்த சிறப்புமிக்க செய்தியானது முதலீட்டாளர்களுக்கு இடையே யெஸ் வங்கியின் மேல் புதிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Author – Gurusanjeev Sivakumar