பிரபல தொழில்நுட்ப நிறுவனமான HP மேக் இன் இந்தியா போர்ட்போலியோவை விரிவுபடுத்தி சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃப்ளெக்ஸ் வசதியில் மடிக்கணினிகள், டெஸ்க்டாப் டவர்கள் மற்றும் மினி டெஸ்க்டாப்களின் பல மாடல்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது” என்ற செய்தியை ஒரு அறிக்கையாக HP நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசாங்க இ-மார்க்கெட்பிளேஸ் (GeM) போர்ட்டலில் கிடைக்கும்படி செய்தல்

அரசாங்கத்தின் பொது கொள்முதல் உத்தரவின் கீழ் சில தயாரிப்புகள் தகுதி பெறுகின்றன மற்றும் அரசாங்கத் துறைகள் மற்றும் பிற வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வசதியாக அரசாங்க இ-மார்க்கெட்பிளேஸ் (GeM) போர்ட்டலில் அவை கிடைக்கும்படி ஆவன செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

HP இந்தியா மார்க்கெட் நிர்வாக இயக்குனர் கேதன் படேல் பேசுகையில், “இந்தியாவில் HP நிறுவனம் தனது செயல்பாடுகளை தொடங்கியதில் இருந்து இந்நாட்டுடன் மிக இணக்கமான நிலையிலே இருந்து வருகிறது. மேலும் இந்தியா அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மாற்றத்திற்கு தம்மை சிறந்த முறையில் தயார் செய்து கொண்டு முன்னேறியும் வருகிறது. இந்நாடு டிஜிட்டல் மாற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை HP நன்கு உணர்ந்தபடியால் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளுடன் நாங்கள் நல்ல முறையில் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என்று கூறினார். மேலும், HP-ன் உற்பத்தி நடவடிக்கைகளின் அளவு மற்றும் வரம்பு விரிவடையச்செய்வதன் மூலம் இந்திய அரசின் “ஆத்மநிர்பார் பாரத்” என்ற கனவு நிறைவு பெரும். அதை நிறைவேற்றும் முயற்சியில் HP ஒரு உன்னத பங்கு வகிக்கும் என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.

அதிக மாடல் மடிக்கணினிகள் உற்பத்தி இந்தியாவில் முதல்முறையாக

இவ்வளவு அதிக மாடல் மடிக்கணினிகள் அதாவது HP எலைட்புக்ஸ், HP புரோபுக்ஸ் மற்றும் HP G8 சீரிஸ் நோட்புக்ஸ் ஆகியவற்றை இந்தியாவில் தயாரிப்பது இதுவே முதல் முறை என்று தெரிகிறது. அதேபோல் பல வேறுபட்ட மாடல் மற்றும் சிறப்பம்சங்களை கொண்ட டெஸ்க்டாப் மினி டவர்கள், மினி டெஸ்க்டாப்கள், AIO கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை சேர்த்ததன் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வணிக மாடல் டெஸ்க்டாப்கள் உற்பத்தியை HP விஸ்தீரணப்படுத்தியுள்ளது.