நாடாளுமன்றத்தில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் மூலோபாய முதலீட்டு கொள்கைக்கு ஒப்புதல் அளிப்பதாக அரசாங்கம் அறிவித்தது” என்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

மத்திய அரசின் இந்த கொள்கையின் முக்கிய நோக்கமே தனியார் மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நடைமுறைகளை உட்புகுத்துதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியை செயல்படுத்த முடியும் என்பதுதான் என்று அவர் கூறினார்.

“முதலீட்டைத் திரும்பப் பெறுவது தொடர்பான பல்வேறு சிக்கல்களைக் கருத்தில் கொள்வது இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவிடம் / அமைச்சரவைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவைக் குழு/அமைச்சரவை இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று அமைச்சர் மேலும் கூறினார்.