வளர்ந்து வரும் வர்த்தகத் துறையில் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப்கள் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமைகளால் வேரூன்றி நிற்கின்றனர். அவர்களின் செயல்பாட்டு திறன் மற்றும் தொழில் யுக்திகளை புரிந்து கொள்வதில் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்-அப்கள் மீது முதலீடு செய்வதில் இப்போது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெண்கள் ஸ்டார்ட்-அப் மீது முதலீடு செய்வதன் முக்கியத்துவம்

“பெண்களை நம்பி அவர்கள் தொழில் மீது முதலீடு செய்வது வணிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது” என்கிறார் ஆன்லைன் பெற்றோருக்குரிய தளமான பேபிசக்ராவின் நிறுவனர் நய்யா சாகி. “நுகர்வோரின் அடுத்த அலையாக பெண்கள் இருப்பதால், அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், பெண்களுக்காகத் தீர்வுகளை காணும் பெண்களிடம் முதலீடு செய்வது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் ஒரு நுகர்வோரின் பயண அனுபவங்கள் அவர்களுக்கு எளிதில் விளங்குகின்றன. எனவே, புதிய பொருளாதாரத்தின் நுகர்வோர்களாக நீங்கள் இருக்க விரும்பும் மக்களிடமிருந்து வருகிற புதிய பொருளாதாரத்தை உருவாக்குபவர்களே இப்போது நமக்குத் தேவை.” என்கிறார் அவர்.

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் MassChallenge ஆய்வறிக்கை

உண்மையில், உலகளவில், ஒரு பெண் நிறுவனராகவோ / இணை நிறுவனராகவோ உள்ள நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகள் சராசரியாக $935,000 ஆகும், இது ஆண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மீது செய்யப்பட்டுள்ள முதலீடுகளை விட சராசரி $2.1 மில்லியனில் பாதிக்கும் குறைவானது என்று பாஸ்டன் கன்சல்டிங் குரூப் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட MassChallenge ஆகியவற்றின் 2018 ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அதே ஆய்வில் பெண்களால் நிறுவப்பட்ட அல்லது இணைந்து நிறுவப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் ஐந்தாண்டு காலத்தில் ஒட்டுமொத்த வருவாயில் 10 சதவீதம் அதிகமாக ஈட்டியுள்ளன.

டாப் நிறுவனங்களில் பெண்களின் தலைமை சிறப்பு – சில அடையாளங்கள்

ஃபின்டெக் நிறுவனத்தின் IPO-க்கு தலைமை தாங்குகிறார் டகு. இது முடிவுற்றால், இந்தியாவின் பொதுச் சந்தையில் வந்த இரண்டாவது பெண் தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனமாக MobiKwik இருக்கும். Nykaa, இதுவே நிச்சயம் முதலிடம் வகிக்கும் நிறுவனம். ஐம்பத்தெட்டு வயதான ஃபால்குனி நாயர் தனது ஆன்லைன் அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை நவம்பரில் பிளாக்பஸ்டர் பொதுச் சந்தைப் பட்டியலுக்குள் கொண்டு சென்றார். இந்த பெருமை மிக்க செயல்பாட்டினால் தன்முயற்சியினால் உயர்ந்த இந்தியாவின் பணக்கார பெண் பில்லியனர் ஆனார்.

“எப்போது நீங்கள் அதிகமான பெண்கள் உயர்வதை பார்க்கிறீர்களா அப்போது தானாகவே இன்னும் அதிகமான பெண்களின் துவக்கத்தையும் பார்ப்பீர்கள்” என்கிறார் ஐஸ்வர்யா மால்ஹி, Rebalance நிறுவனத்தின் இணை நிறுவனர்.

மேலும் “பெண் தொழில்முனைவோர்களுக்கு இது மிகவும் ஏற்ற நேரம். முதலீட்டு சமூகம் அவர்களை ஆதரிக்கிறது. நாம் அனைவரும் நமது நேரம், வளங்கள் மற்றும் பணத்தை, ஏதோவொரு இடத்தில், ஆய்வுசெய்யப்பட்ட அல்லது பழக்கமான இடங்களில் முதலீடு செய்ய விரும்புகிறோம். இது இயற்கையானது. ஆனால் இது காலப்போக்கில் உடைக்கவே முடியாத ஒரு எதிரொலி அறையை நிறுவனர்களில் மீது உருவாக்குகிறது. VCகளாக, நாம் அதை உடைப்பதில் தீவிரமாக இருக்க வேண்டும். நிறுவனர்களின் கைகளில் நாம் வைக்கும் சரியான அளவு நம்பிக்கை, பணம் மற்றும் வளங்களைப் பொறுத்து அவர்களின் செயல்கள் மாற்றமடையும். பெண் தொழில்முனைவோருக்கு இவற்றை அணுகுவது கடினமாக இருக்கக்கூடாது,” என்று Malhi குறிப்பிடுகிறார்.

மேலும் பெண் தொழில்முனைவோர் முன்னேற்றம் மற்றும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து செய்யப்படும் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் பல்வேறு பெண்மணிகள் – கலரி கேபிட்டலின் நிர்வாக இயக்குனர் வாணி கோலா, மது ஷாலினி ஐயர், பார்ட்னர், ராக்கெட்ஷிப்,