இந்தியாவை மிகப்பெரிய உற்பத்தி தளம் ஆக மாற்ற வேண்டும் என்னும் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக நம் இந்திய நாட்டில் அடுத்த ஐந்து வருடங்களில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உலகினுடைய மையப்புள்ளி ஆக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.

பெகட்ரான் நிறுவனம்:

இதன் மூலமாக ஸ்மார்ட்போன் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தினுடைய இரண்டாவது பெரிய உற்பத்தி கூட்டணி நிறுவனங்களில் ஒன்றான பெகட்ரான் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கான மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழாக ரூ.1,100 கோடி மதிப்புடைய முதலீட்டைச் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சீனாவில் உற்பத்தி பணிகளுக்காக குறைந்தபட்ச சம்பளத்தில் அதிகப்படியான ஊழியர்கள் கிடைத்த காரணத்தினால் பல TECH, GADGET மற்றும் AUTOMOBILE நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி தளத்தை சீனாவில் அமைத்தது. ஆனால், 2019-ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் ஏற்பட்ட சமயத்தில் அமெரிக்காவினுடைய முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் சீனாவில் இயங்கி வந்த அமெரிக்கா நிறுவனங்களை அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் காரணமாக சீனாவில் உற்பத்தி தளத்தை அமைந்து இருந்த பல நிறுவனங்கள் தென் ஆசிய நாடுகளுக்கு சென்றது.

அதனால் சீனாவிலிருந்து வெளியேறிய பல நிறுவனங்கள், இந்தியாவில் தங்களின் உற்பத்தி தளத்தினை அமைக்க ஈர்க்கும் வகையில், இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலை அமைத்து விரைவாக தங்களின் உற்பத்தியைத் துவங்குகின்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு பலவித சலுகைகளை அறிவித்திருந்தது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலையை அமைக்க விரைந்தது. சீனாவிலிருந்து வெளியேறிய மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். அதுபோல கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சீனாவிலிருந்து சுமார் ஒன்பது நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன் தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றியுள்ளனர்.

இந்த ஒப்புதலின் மூலமாக தொழிற்சாலையை அமைக்கும் பணி வேகமாகத் துவங்கவுள்ள பெகட்ரான் நிறுவனம் 2021-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது முற்பகுதியில் தங்களின் உற்பத்தியைத் துவங்கவுள்ளது என்று அந்நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் LIAO SYH JANG என்பவர் தெரிவித்துள்ளார். தைவான் நாட்டை தலைமை இடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனம் சென்னையில் தங்களின் தலைமை அலுவலகத்தை அமைத்துள்ளதால் தமிழக மக்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தினுடைய மூன்று உற்பத்தி கூட்டணி நிறுவனங்களான பெகட்ரான், பாக்ஸ்கான், விஸ்திரான் ஆகிய மூன்றும் இந்தியாவில் தொழிற்சாலையை அமைத்து உள்ளது. இதில் பெகட்ரான் நிறுவனம் ஆப்பிள் கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது. அதேபோல், பாக்ஸ்கான், விஸ்திரான் ஆகிய 2 நிறுவனங்களும் சியோமி உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Author – Gurusanjeev Sivakumar