இறைவன் நமக்களித்த செல்வங்களான இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பல பொருட்களில் ஒன்றாக உள்ள பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையே தற்போது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் ‘மீண்டும் மஞ்சப்பை’ விழிப்புணர்வு பிரச்சாரம். இந்த பிரச்சாரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 23 சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார்.

சராசரியாக ஒரு நபர் சுமார் 20 நிமிடங்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பையை பயன்படுத்துகிறார், எனில் மொத்த ஜனத்தொகையும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்த வேண்டுமெனில் பல நூறு ஆண்டுகள் தேவைப்படும். அந்த பிளாஸ்டிக்கை எரிக்கும்போது அது சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் ஆபத்தும் அதிகம்.

இவற்றை கவனத்தில் கொண்டு 14 வகையான பொருட்களுக்கு அரசு தடை விதித்திருந்தது. இடையில் ஏற்பட்ட கோவிட் லாக்டவுன் காரணமாக இந்த தடை அமுலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் எங்கு சென்றாலும் மக்கள் துணிப்பைகளை கையில் கொண்டு சென்றனர். ஆனால் இப்போது அது முற்றிலும் மாறி பிளாஸ்டிக் பைகளின் உபயோகமே முற்றிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆகவே மக்கள் மறந்து போன துணிப்பை பழக்கத்தை மீண்டும் கொண்டு வர தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை “மீண்டும் மஞ்சப்பை”.

ஒரு கண்காட்சி மூலம் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டம் உள்ளது. இந்த கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் கலைவாணர் அரங்கில் பெற்றது. மேலும் நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளது என்று தெரிகிறது.

சுற்றுச்சூழலில் தமிழக அரசின் முன்னிலை அவசியம் – மக்களுக்கு முதல்வர் அறிவுரை

அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முன்னணி வகிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களின் ஆதரவு இந்த அமைப்பிற்கு தேவைப்படுகிறது என்று முதலமைச்சர் கோருகிறார்.