நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021 என்ற மசோதாவில் பெரும்பாலான தனியார் கிரிப்டோகரன்சிகளும் தடை செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்செய்தி வெளியாகி உள்ளதை தொடர்ந்து கிரிப்டோகரன்சிகள் மதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

தனியார் மற்றும் பப்ளிக் Cryptocurrency

முதலீட்டாளர்கள் மட்டுமல்லாது அனைவருக்குமே இப்போது தனியார் கிரிப்டோகரன்சி பப்ளிக் கிரிப்டோகரன்சி என்பதில் குழப்பம் வந்துள்ளது. அது பற்றி சிறு தெளிவு. கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் அனைத்துமே பதிவு செய்யப்படும். கிரிப்டோகரன்சி வர்த்தக பரிமாற்றங்கள் (transactions) அனைத்தும் முதலில் distributed ledgers கீழ் save செய்யப்படும் பிறகு centralized ledgerல் சேமிக்கப்படும்.

இந்த Distributed ledger-ல் நெட்வொர்க் உறுப்பினர்கள் மாற்றங்களைச் செய்யவேண்டுமெனில் அதற்கு அனுமதி பெற வேண்டிய கட்டாயமும் உண்டு அனுமதி தேவைப்படாத நிலையும் உண்டு. பப்ளிக் அல்லது பிரைவேட் என்ற பிரிவு இதன் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது அதாவது Distributed ledger-ஐ நெட்வொர்க்-ல் இருக்கும் யார் வேண்டுமானாலும் Access செய்ய முடியுமெனில் அதுவே பப்ளிக், அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருக்குமெனில் அது பிரைவேட். இது போன்ற சில தொழில்நுட்ப அடிப்படை வித்தியாசங்கள் தான் தனியார் மற்றும் பப்ளிக் என்று கிரிப்டோகரன்சிகளை வேறுபடுத்துகிறது.

பிளாக்செயின் தொழில்நுட்பம்

அதேபோல் எல்லா கிரிப்டோகரன்சிகளும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்கி வருகின்றன. privacy-ஐ பொறுத்தவரையில் பப்ளிக் கிரிப்டோகரன்சியை Distributed ledger உதவியுடன் டிராக் செய்யலாம், ஆனால் தனியார் கிரிப்டோகரன்சியை டிராக் செய்ய முடியாது. உரிமையாளரின் ரகசியம் பாதுகாக்கப்படும். தனியார் கிரிப்டோகரன்சி மூலம் transaction ரெகார்டஸ் இல்லாமலே பரிமாற்றம் செய்ய முடியும், யாரும் கண்டுபிடிக்க முடியாது. இது பல பிரச்சனைகளை உருவாக்குகிறது என்பது பல நாடுகளும் எதிர்கொள்கின்ற பிரச்சினை.

Cryptocurrency-யின் எதிர்காலம்!

பத்திரிக்கைக்களில் பிட்காயின், லைட்காயின், எதிரியம் ஆகியவை பப்ளிக் Cryptocurrency என்றும் மோனெரோ, Zகேஷ் , டேஷ் போன்றவை பிரைவேட் Cryptocurrency என்றும் குறிப்பிடப்படுகின்றன. மத்திய அரசு எந்த விதத்தில் இவற்றை தரம் பிரிக்கின்றது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் மத்திய அரசின் மசோதா தாக்குதல் அறிவிப்பு வந்ததிலிருந்து கிரிப்டோகரன்சி மதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.