முதல் நாள் பங்கு வர்த்தகத்தில் 10% உயரத்தை தொட்ட Eris Lifesciences பங்குகள்

வார முதல் நாள் திங்கட்கிழமை டிசம்பர் 6ம் தேதி ஆரம்ப வர்த்தகத்தில் பம்பர் பரிசாக Eris Lifesciences பங்குகள் ஏறக்குறைய 10% உயர்ந்தது. இந்த பம்பர் ஏற்றத்திற்கு காரணம் இந்நிறுவனம் இப்போது MJ Biopharm நிறுவனத்துடன் இன்சுலின் பிரிவில் கூட்டு முயற்சி ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்கள் தொடர்ந்து சரிவிக்கு பிறகு ஃபார்மா பங்குகள் சற்று உயரத்தொடங்கியுள்ளது. BSE-ல் ஆரம்ப நிலையிலேயே 3.73% உயர்வு கண்டு ரூ.732ல் துவங்கியது (முன்பு விலை ரூ.705.70).

Eris Lifesciences பங்குகள் அடைந்த லாபம்

ஒரு வருடத்தில் 38.57% லாபமடைந்த இந்த பங்கு, ஆண்டின் துவக்கத்திலிருந்து 26.69% உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள் (மொத்தம் 0.13 லட்சம்) BSE-ல் கைகள் மாறி இறுதியில் ரூ.99.86 லட்சம் விற்றுமுதலாக்கியுள்ளது. மருந்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.9,982 கோடியாக BSE-ல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 2020-ல், 52 வாரங்களில் உச்ச மதிப்பு ரூ.863.15 ஆகவும், குறைந்த மதிப்பு ரூ.523 ஆகவும் இருந்தது.

பொருட்களின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் நோக்கம்

Eris Lifesciences இப்போது MJ Biopharm உடன் செய்துள்ள கூட்டு முயற்சிக்கு காரணம் தனது பொருட்களின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தி கார்டியோ-மெட்டாபாலிக் நோயாளிகளை காப்பாற்ற உயிர் சிகிச்சை பெற விருப்புத்தேர்வுகாய் ஏற்படுத்தவே என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டு முயற்சியில் Eris Lifesciences 70% [பங்குகளை தன வசம் வைத்திருக்கும். Aspart, Glargine and Lispro and GLP-1 agonists உட்பட மனித மற்றும் ஒப்புமை இன்சுலின் மருந்தை சந்தைபடுத்துதல் மற்றும் விநியோகத்தில் இநிறுவனம் முதலில் ஈடுபடும். தயாரிப்பு, வளர்ச்சி, மற்றும் விற்பனை போன்ற விஷயங்களின் மீது பொறுப்பை MJ Biopharm நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.

கூட்டு முயற்சிக்கு பிறகு முதலில் கமர்ஷியலாக இருக்கும் தயாரிப்பு

அதன் தயாரிப்புகளில் முதலில் வணிகமயமாக்க இருப்பது ‘recombinant human insulin’ (மீண்டும் இணைந்த மனித இன்சுலின்) ஆகும். இது வயல்ஸ் மற்றும் கார்ட்ரிட்ஜ்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டு முயற்சியில் பல உயிர்-சிகிச்சை சூத்திரங்கள் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டயாபடீஸ் கேர் போர்ட்ஃபோலியோவில் இப்போது இருக்கும் இடைவெளியை இந்நிறுவனம் இந்த கூட்டு முயற்சியின் மூலம் குறைக்கிறது.