ஹரித்துவாரை சார்ந்த பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனத்தினுடைய நிகர லாபம் ஆனது கடந்த நிதி ஆண்டில் 21.56% அதிகரித்து உள்ளது.

பதஞ்சலி நிறுவனம்:

இது தொடர்பாக டஃப்ளா் ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியதாவது, 2020 ஆண்டின் மாா்ச் மாதத்தில் முடிந்த நிதி ஆண்டில் பதஞ்சலி நிறுவனத்தின் விற்பனையின் மூலமாக 9022.71 கோடி ரூபாய் வருமானத்தினை பெற்றுள்ளது.

குறிப்பாக, இதன் முந்தைய 2018-2019 நிதி ஆண்டு காலத்தில் பெறப்பட்ட வருமானம் ஆனது 8522.68 கோடி ரூபாயுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 5.86% அதிகம் ஆகும்.

இந்த நிறுவனத்தின் நிகர லாபமும் 349.37 கோடி ரூபாயிலிருந்து 21.56% வளா்ச்சி அடைந்து 424.72 கோடி ரூபாய் ஆனது.

பதஞ்சலி நிறுவனத்தின் செலவினம் ஆனது நிதி ஆண்டில் 5.34% உயா்ந்து 8521.44 கோடி ரூபாய் ஆக இருந்தது.

இதன் வரிக்கு முந்தைய லாபம் ஆனது 452.72 கோடி ரூபாயில் இருந்து 25.12% வளா்ச்சி பெற்று 566.47 கோடி ரூபாய் ஆக இருந்தது என்று டஃப்ளா் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Author – Gurusanjeev Sivakumar