சமீபத்தில் ‘இந்தியாவுக்கான எரிபொருள் 2021” என்ற இணையவழி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜியோ மார்ட் நிறுவன இயக்குனர்கள் ஈஷா மற்றும் ஆகாஷ் அம்பானி ‘சில்லரை வணிகத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கின் போது வாட்ஸ் அப் வாயிலாக ஜியோ மார்ட்டில் காய்கறி, மளிகை பொருட்களை ஆர்டர் செய்வது தொடர்பாக செயல்முறை செய்தனர். இம்முறையில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.

jiomart-ல் அப்படி என்னதான் சிறப்பு

வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்வதில் சிரமம் எதுவும் இருக்காது. வாட்ஸ் அப்பில் ‘tap and chat’ என்ற வசதி மூலம் ஆர்டர்களை பதிவு செய்யலாம். டெலிவரி கட்டணம், குறைந்த பட்ச ஆர்டர் தொகை என எதுவும் கிடையாது, முக்கியமாக கேஷ் ஆன் டெலிவரி வசதி உள்ளது.

மக்கள் அனைவரும் வாட்ஸப் உபயோகத்தில் நல்ல அனுபவசாலிகளாக இருப்பதால் வேண்டும் பொருட்களை ஆர்டர் செய்வது சாதாரண உரையாடல் மாதிரியே இருக்கும். டிஜிட்டல் உலகில் இது நிச்சயம் ஒரு நுகர்வோர் புரட்சியாக இருக்கும் என்று கூறினார் ஆகாஷ் அம்பானி. மேலும் அவர் கூறுகையில், ஜியோ மற்றும் மெட்டா குழுக்கள் செயல்பாடுகள் நெருக்கமானது. ஆகவே இரண்டும் இணைந்து ஒன்றாக செயல்படுவதற்கான வழிகளைத் ஏற்படுத்தி வருகிறோம். அப்படி ஒரு வழியே இந்த வாட்ஸ்அப்பில் ஜியோ. இதன் மூலம் ப்ரீபெய்ட் ரீசார்ஜூம் எளிதாகிறது என்றார்.

சிறு வணிகங்களே நம் நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பு. சிறு வணிகக் கடைகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சிறு வணிகங்கள் தங்கள் செங்கல் மற்றும் மோட்டார் கடைகளை டிஜிட்டல் ஸ்டோர் முகப்புகளாக மாற்றுவதன் தேவையை இந்த கொரோனா பேன்டமிக் நமக்கு உணர்த்தியது என்று ஈஷா கூறினார்.