பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் தங்கள் முதலீட்டை திருப்பிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். காரணம் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தது தான் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் அனைத்து துறைகளும் சந்தை பொருளாதாரத்தில் வளர்ச்சியடையும் என்ற முதலீட்டாளர்களின் கணிப்பை பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. தேர்தலை முன்னிட்டே இந்த அறிவிப்பை மோடி வெளியிட்டுள்ளார் என்று பரவலாக கருத்தும் நிலவிவருகியது. அதேசமயம் விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் இது உள்ளது.

நேற்றைய நிலவரப்படி சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் இப்போது சரியத்தொடங்கிவிட்டன. 1900க்கும் மேற்பட்ட பங்குகள் முன்னேற்றம் கண்டிருந்தது அவற்றில் ONGC, அதானி போர்ட்ஸ், கோல் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, பாரத் பெட்ரோலியம் ஆகியவை அடங்கும். டாடா கன்சியூமர் பிராடக்ட்ஸ், இன்ஃபோசிஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட 1250 பங்குகள் சரிவை சந்தித்தன. மேலும் 140க்கும் மேற்பட்ட பங்குகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தன.

இதே நேரத்தில் பெரும்பாலான தனியார் கிரிப்டோகரன்சி தடை செய்யப்படும் என மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கிரிப்டோகரன்சிகளின் மதிப்பும் நேற்று முதல் சரியத்தொடங்கி உள்ளது.