2021-22ம் நிதியாண்டு, டிசம்பர் 10ம் தேதி வரை வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் வருவாய் ரூ.9000 கோடியை தாண்டியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 2020-21-ஐ விட இது ரூ.1969.77 கோடி அதிகம்.

அடுத்த ஆண்டுக்கான இலக்கு ரூ.15000 கோடி என திட்டமிடல்

தமிழக அரசின் பதிவுத்துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளாலும் சீரிய செயல்பாட்டுகளாலும் வரும் ஆண்டில் இன்னும் அதிக வருவாய் ஈட்டி ரூ.15000 கோடி இலக்காக நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து உதவி பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் ஆகியோர் தன் பணியை செம்மையாக ஆற்றி அரசின் வருவாயை கூட்டுவதில் தீவிர கவனம் செலுத்துமாறு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.

அரசு அதிகாரிகளுக்கு கூறப்பட்டுள்ள வழிகாட்டு முறைகள்

குறிப்பிட்ட இலக்கை அடைய என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டி மதிப்புக்கு குறையாதபடி ஆவண சொத்துக்களை மதிப்பீடு செய்தல், தேவைப்படும் ஆவணங்கள் யாவும் முறையாக இருப்பின் அவற்றைப் பதிவு செய்து உடனடியாக விடுவித்தல், தணிக்கை இழப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்டறிந்து முழுமையாக வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளுதல் போன்ற பல யுக்திகளை திறம்பட கையாள வேண்டுமாய் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.