புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர், ‘ நம் தமிழகத்தில் தான் இந்தியாவில் அந்நிய முதலீட்டாளர்கள் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் முதலீட்டு மையம் ஆக திகழ்ந்து வருகிறது.

தற்போது, சர்வதேச அளவிலாக அனைத்து நாடுகளுமே கோவிட்-19 தொற்றின் பாதிப்பால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தகைய சூழலிலும் தமிழ்நாடு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிகப்படியான வேலைவாய்ப்பினை உருவாக்குகின்றதிலும் மிகவும் மும்முரம் காட்டி வருகிறது.

நடப்பு ஆண்டில் தமிழ்நாடு தான் தொழில் துறைகளில் அதிகமான முதலீடுகளை பெற்ற இந்திய மாநிலமாக முன்னிலையில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 74,000 பேருக்கு வேலைவாய்ப்பு:

தமிழக அரசு முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டத்தில் இதுவரை மொத்தம் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலமாக சுமார் 40,718 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை பெற முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த திட்டங்களின் வாயிலாக தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட் 74,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து இரண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடானது தமிழக அரசின் சார்பாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலமாக முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆனது அதிகரித்து உள்ளதாகவும் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டினார்.

Author – Gurusanjeev Sivakumar