தற்போது ஆன்லைன் மற்றும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்துதலை மிகவும் பாதுகாப்பாக மாற்றும் முயற்சியாக, RBI நாளை முதல் (அக்டோபர் 1 2020 முதல்) நடைமுறைக்கு வர உள்ள புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுக்கு புதிய விதி:

இந்த புதிய விதிகள் கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், கொரோனா தொற்றுநோய் காரணத்தினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் இந்த புதிய விதிகள் ஆனது நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஆனது. ஆனால் RBI, இந்தப் புதிய மாற்றங்களை நாளை முதல் (அக்டோபர் 1 2020) அமல்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயனர்கள் அனைவரும் RBI ஆல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகள் என்ன என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை வங்கிகளில் தற்போது வழங்கும் போது வாடிக்கையாளர்கள் அனைவரும் உள்நாட்டு பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையானது தேவைப்பட்டால் மட்டும் இனி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையுள்ள சேவைகளுக்காக இனி அவர்கள் தங்கள் வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உங்கள் கார்டுகளை உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த வேண்டுமா அல்லது சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த வேண்டுமா என தாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் எனவும், வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனையின் வரம்புகளை 24 மணி நேரமும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஜூன் மாதத்தில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகள் மிகவும் குறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலமாக கடந்த ஜூன் மாதத்தில் ரூ.42,818 கோடிக்கு பொருட்களை வாங்கி உள்ளதாகவும், ஆனால் இதே ஆண்டு கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.67,000 கோடிக்கு பொருட்களை வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த ஜூன் மாதத்தில் 12.5 கோடி முறை டெபிட் கார்டு பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆனால் இதே ஆண்டு ஜனவரி மாதத்தில் 20.3 கோடி முறைகள் பயன்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊராடங்கின் காரணமாக தான் குறைந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Author – Gurusanjeev Sivakumar